Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து கதறி அழும் இலங்கை பெண்கள்..!


ஜித்தா - சரப்பியா பாலத்திற்கருகில் தாம் நிர்க்கதியான நிலையில் தாம் அவதிப்படுவதாக குறிப்பிட்ட பகுதியிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்றுநேரத்திற்கு முன்னர் தொடர்புகொண்ட இலங்கை சகோதரிகள் கண்ணீர் மல்க குறிப்பிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது,

தாம் நிர்க்கதியான நிலையில் காணப்படுவதாகவும், உடைகளை மாற்றுவதற்கோ, மலசலகூடம் செல்லவோ தாம் பெரும் கஷ்டப்படுவதாகவும் தமது அவலங்கள் குறித்து இலங்கை அரசாங்கமும், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சவூதி அரேபியா எஜமானர்களால் தாம் பணிபுரிந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதும் பாலத்திகு அடியில் தஞ்சமடைந்திருக்கும் தாம் இலங்கை தூதரகத்திற்கு நீதிகேட்டு சென்றால் அங்கும் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாவதாக கவலையுடன் குறிப்பிடும் அந்த முஸ்லிம் சகோதரிகள் குறித்த பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை நாட்கள்தான் ஏனைய ஆண்களுடனும், ஏனைய நாட்டவர்களுடனும் மிகச்சிறிய பகுதியில் அமர்ந்திருப்பது எனவும் குரல் வினவுகின்றனர்.

அதேவேளை சவூதி அரேபியாவிலிருந்து தொடர்புகொண்ட மற்றும் சில சகோதரர்கள், சவூதி அரேபியாவில் தவ்வா பிரச்சாரத்தில் ஈடுபடவென பல இலங்கை அமைப்புக்கள் இருப்பதாகவும், எனினும் அல்லற்படும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அந்த அமைப்புக்கள் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்கள்.

சவூதி அரேபியாவில் பயான் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும், அதற்கு அழைப்பு விடுப்பதிலும், அந்த நிகழ்வை ஊடகங்களுக்கு அனுப்பி பிரபல்யம் தேடுவதிலும் ஆர்வம் கொண்டுள்ள இந்த இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தமது அவலம் குறித்து எத்தகைய நடவடிக்கையிலும் இதுவரை ஈடுபடவில்லையெனவும் அவர்கள் கவலையுடன் குறிப்பிட்டனர்.

6 comments:

  1. Where is our ministers, at least will they look in to this?

    ReplyDelete
  2. உண்மையில் இவர்களது நிர்க்கதியான நிலை கவலைக்கறியதுதான் என்றாலும் இவர்கள் தவ்வா அமைப்புகளைக் குறை கூறுவதை ஏற்க முடியாது.ஏனைனில் நான் அறிந்ந வகையில் எந்நவொரு தவ்வா அமைப்பும் யாரையும் வெளிநாடு சென்று உழைக்கச் சொல்லவும் இல்லை அனுப்பி வைக்கவும் இல்லை.மாறாக மஹ்ரம் இல்லாமல் பெண்கள் வெளிநாடு செல்வது ஹராம் என்றுதான் கூறி வருகிறார்கள்.இவர்கள் தம்மை அனுகப்பிய முகவர் நிலையம் , வெளிநாட்டு வேளைவாய்ப்புப் பணியகம் , இலங்கைத் துாதரகம் .மற்றும் அந்நியச் செலாவணியை அதிகமாகப் பெறும் அரசாங்கம் இவைகளைத்தான் குறை சொல்ல வேண்டுமே தவிர , இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளை அல்ல.


    ReplyDelete
  3. தஃவா அமைப்புகளை குறைகூற உங்களுக்கு என்ன அருகதையுள்ளது அவங்களே உங்களைக்கவனிக்கவில்லையென்றால் நீங்கள் அந்தளவுக்கு அசிங்கமானவர்களாக நடந்திருக்கின்றீர்கள், யாராவது சொல்லுங்கள் பார்ப்போம் இல்லை நான் சுத்தமாகத்தான் இருந்தேனென்று.......

    ReplyDelete
  4. இலங்கைப் பெண்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவதற்கான காரணம் என்ன?
    பெண்களின் மானமும், மரியாதையும் பாதுகாக்கப்படுவதற்காக இஸ்லாம் பெண்களுக்கென்றே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆண் துணையின்றி வெளியில் செல்வதும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று சம்பாத்தியம் செய்வதும், கணவன்மாரை வீட்டில் தூங்க வைத்து விட்டு பெண்கள் முறை தவறி தொழில் செய்வதும் இஸ்லாமிய வரம்பை மீறும் சில செயல்களாகும். அதனால் ஏற்படும் விபரீதங்களோ ஏராளம். போதாக்குறைக்கு யாரிடமோ வேலை செய்வதற்காகச் சென்று சில கயவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி கள்ளத் தனமாக வேறு இடங்களுக்கு மாறிச்சென்று வேலை பார்த்தன் கதியே இன்று எவரும் கைகொடுக்காத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
    இக்கட்டான நிலையில் அன்றாடப் பசியைப் போக்குவதற்குக் கூட வழியில்லாத பரிதாப நிலையில் சில பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அதிக பெண்கள் மேலதிக வருமானம் தேடவும், கையிலும் கழுத்திலும் அடுக்கடுக்கான ஆபரணங்கள் அணியும் ஆசை போன்ற தேவையற்ற காரணங்களுக்கே செல்கின்றனர்.
    எப்படியாயினும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட, தன் மானத்தின் மீது பொறுப்புள்ள எப்பெண்ணும் இவ்வாறான தொழிலைத் தேர்ந்தெடுக்கமாட்டாள் என்பதே யதார்த்தம்.
    இவைகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டு யார் யாரையோ குறை கூறுவது நியாயமற்றதாகும்.
    ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இவர்களை அனுப்பியிருப்பதால் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமே தவிர பிறரை குறை கூறுவதால் எதுவும் நடப்பதில்லை.
    தஃவா நிலையங்களுக்கு இலங்கையிலிருந்தோ பிற நாடுகளிலிருந்தோ வேலைக்கு எடுப்பது தஃவா சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கே. அதுவே அவர்களின் பொறுப்பு.
    முறையாக வேலை செய்யும் எவரும் தம் எஜமானர்களிடமிருந்து வெளியேற்றப்படுவதில்லை என்பதை சகலரும் அறிந்துகொள்வார்களாக.
    இனியாவது செய்த தவறை இவர்கள் உணரட்டும். இவர்களின் மானம் மரியாதைகள் பாதுகாக்கப்பட்டவர்களாக அவசரமாக நாட்டுக்குத் திரும்பிவிட வல்லவன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

    ReplyDelete
  5. தஃவா நிலையத்தின் மூலம் பெயரையும் புகழையும் தேடுவதே நோக்கம் எனக் குறிப்பிட்டிருப்பதும், பயான் நிகழ்சிகளை வைப்பது மட்டுமே பணி என்று குறிப்பிடுவதும் பெரும் தவறாகும் என்பதை சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் சாதாரண மக்களின் மூலமே புரிந்துகொள்ளலாம். தஃவா நிலையங்கள் மூலம் பல் வேறு சேவைகள் நடப்பதை நாமே அறிந்துள்ளோம். கோபத்தினால் நிதானமிழப்பது இயல்பு.

    ReplyDelete
  6. உண்மையாக செல்வதாயின் பெண்களை பொறுத்தவரை
    மிகவூம் குறைவானவர்களே உரியமுறையில் தமக்கு ஏதாவது பிரச்சிணை வரும்போது ஆரம்பதிலேயே இலங்கைத்தூதரகத்தை நாடுகின்ரார்கள்
    அதிகமானாவர்கள் தான் விரும்பியபடி இருந்துவிட்டு நாட்டுக்கு போகநினைதத்தால் தூதரகத்துக்கு முதலே ஷுரபிய்யாவூக்கு வருகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.