உண்மை நிலையை பொலிஸார் கண்டுபிடிக்க வேண்டும் - அஸாத் சாலி
யாழ்ப்பாணத்தை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் உதயன் பத்திரிகை அலுவலகம் 33வது தடவையாக இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.உதயன் பத்திரிகை அலுவலகமும் அதன் ஏனைய வளங்களும் ஏறகனவே 32தடவைகள் தாக்கப்பட்டுள்ள போதிலும் கூட இன்று வரை அது சம்பந்தமாக எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவும் இல்லை. யார் மீதும் இதுவரை சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. கடைசியாக நடத்தப்பட்டுள்ள இரண்டு தாக்குதல்களும் ஒருவார கால இடைவெளிக்குள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.அதிலும் கடைசித் தாக்குதல் அந்தப் பத்திரிகையின் வெளியீட்டை முற்றாக சீர்குலைப்பதை நோக்காகக் கொண்டு அதன் அச்சுப் பகுதி முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்த அலுவலகம் 32 தடவைகள் தாக்கப்பட்டுள்ள போதிலும் கூட எவரையும் கைது செய்யாத பொலிஸார் 33வது தாக்குதலுக்கு மட்டும் புது வியாக்கியானம் வழங்கியுள்ளனர்.அரசாங்கத்துக்கு அபகீhத்தி ஏற்படுத்தும் வகையில் உதயன் அலுவலகத்தோடு தொடர்புடைய உள் நபர்களே இதைச் செய்திருப்பதாக இந்தச் சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இவ்வளவு விரைவான ஒரு முடிவுக்கு பொலிஸாரால் வர முடியுமானால் அதற்கு முந்திய சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஏன் எவரையும் கைது செய்ய முடியவில்லை? என்ன காரணங்களின் அடிப்படையில் பொலி}hர் இந்த முடிவுக்கு வந்தனர்.முன்னைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன ஆனது?
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு ஒரே ஊடக நிறுவனமும் அதன் வளங்களும் 33 தடவைகள் தாக்கப்பட்டுள்ளது என்றால், ஏனைய ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைப் பட்டியலிட்டால் அது மிகவும் நீளமானதாக அமைந்துவிடும்.
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க உட்பட பல ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என எவருமே இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.ஆனால் களனி பிரதேச சபை உறுப்பினர் கொலை தொடர்பாக சந்தேக நபர்கள் 48 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் என்னவென்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒரு குற்றச் செயல் இடம்பெற்றால் அதனால் பாதிக்கப்படுகின்ற தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கிடைக்கின்ற குறைந்த பட்ச நிவாரணமும் ஆறுதலும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதுதான். ஆனால் இன்று சாதாரண மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அந்த குறைந்தபட்ச நியாயம் கூட இல்லை என்றாகிவிட்டது.
அண்மைக் கால சம்பவங்களை நோக்குகின்ற போது சட்டமும் ஒழுங்கும் அதை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையும் இன்று ஏதோ ஒரு மறை கரத்தினால் நசுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் மீது தமது கடமைகளைச் சரிவர செய்ய முடியாத வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்ற சந்தேகமே மேலோங்குகின்றது.
இந்த நிலை நீடிப்பது மக்கள் எதிர்ப்பார்க்கும் ஜனநாயக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.பொலிஸார் யாரோ சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லி நடந்ததை மூடி மறைக்க முயலாமல் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவம் பற்றிய உண்மைகளை முழுமையாக வெளிக் கொண்டுவந்து மக்கள் மத்தியில் அவர்கள் இழந்துள்ள நம்பிக்கை மற்றும் கீர்த்தி என்பனவற்றை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.அப்போது தான் நாட்டு மக்களுக்கு காவல்துறை மீதும் சட்டத்துறை மீதும் முழுமையான நம்பிக்கை ஏற்படும்.
அரசாங்கம் மாறவேண்டும் தற்போதை நிலவரம் இன்னும் இதேபோன்று நீடிக்குமானால் இலங்கை மிகமோசமானதொரு பின்னடைவை நோக்கிச்செல்லும் தற்போது அது ஆரம்பமாகி பின்னோக்கியவண்ணமேயுள்ளது. இது நாட்டுமக்களனைவரின் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் இன்றையகாலத்திற்கொரு நல்லதீர்வொன்றை எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது..
ReplyDelete