இலங்கையில் தீவிரவாதத்தை வளர்த்தது இந்தியாதான் - பாகிஸ்தான் பத்திரிகை தகவல்
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையற்ற ஒன்று என்று பாகிஸ்தானின் “த நேஷன்” செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பிக்குகள் இந்தியாவில் தாக்கப்படுவதும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை வீரர்கள் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது என குறிப்பிடுவது உள்ளிட்ட விடயங்களை த நேஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்காசியாவின் பூகோள அமைப்பில் முக்கிய இடத்தில் அமைய பெற்றுள்ள இலங்கையின் சுயாதீனத்திற்கும், மக்களுக்கும் இந்தியா குறுக்கீடாக இருப்பதாகவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் தீவிரவாத்தை வளர்த்து இந்தியோவே எனவும் த நேஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
1983ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சியை வழங்கியது இந்தியாவின் ரோ உளவு அமைப்பே ஆகும்.
இந்தியாவில் 32 முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலை புலிகளின் உளவு பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கு மாத்திரமின்றி விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பயிற்சி அளிக்கப்படமையும் தமிழ் நாட்டிலேயே எனவும் பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment