Header Ads



'முஸ்லிம்களும் பந்தாடப்படுகின்ற சூழலில்தான் நாம் இருந்து வருகின்றோம்' - ஹக்கீம்



(ஜெஸ்மி எம்.மூஸா)

வீரரர்கள் உதைபந்தாடுவது போல் இந் நாட்டில் முஸ்லிம்களும் பந்தாடப்படுகின்ற சூழலில் தான் நாம் இருந்து வருகின்றோம் என நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மருதமனை மசூர்மௌலானா சதுக்கத்தில் இடம்பெற்ற மரிகோல்ட் கிண்ண சுற்றுப் போட்டியில் இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உதைப்பந்தாட்ட சங்கத்தின்தலைவர் ஏ.எம்.ரகீப் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.ஏ ஜவாட் உள்ளிட்ட பலர் இதில் கலந்த கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் அவர்கள் 

உலமா சபையின் கிழக்கு மாகாண நிருவாகிகளையும் பள்ளிவாசல் தலைவர்களையும் மூன்று விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து எமக்கும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கம் தொடர்பில்லை என அரசாங்கம் கூறியிருக்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

இந் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை  அரசியல் ரீதியாக அனுகுவதற்குரிய அறிவியல் போதாமை பேரினவாத்திற்கு இருக்கின்றது. இதனால் தான் அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாமல் போகின்ற சூழ்நிலை ஏற்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் தற்போது ஏற்பட்டிருக்கம் சூழ்நிலைகள் குறித்து  செயற்படுவதில் போதாத நிலையிருக்கிறது என்ற ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து எமது நிலைப்பாட்டினை இந் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கான முழுமையான கலந்துரையாடல் ஒன்றை மக்கள் முன்னிலையில் விளக்கமளிக்கும் நிகழ்வாக இன்னும் ஓரிரு தினங்களில் மருதமனையில் ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

இறுதிப் போட்டியில் ஆடிய மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டக் கழகத்தை 04 க்கு 03 என்ற கோல் கணக்கில் தண்டணை உதை மூலம் வென்ற கோல்ட் மைனட் விளையாட்டுக் கழகம் இந்நிகழ்வில் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

10 comments:

  1. Hi
    What you are trying to tell us. Is that the Sri Lankan Government does not have sufficient knowledge to solve minority problems politically. Very good, it implies that there are some problems for minority from some sources, but government does not have capacity to handle it.
    Don’t you know all these problems are created with the blessing of the government?
    We know that you are unable to solve these problems. After winning the eastern provincial council election you did not demand the government to solve Muslims problems (at that time we had Dambulla and Anuradapura Mosque problems) but you demanded two ministries in provincial council and central government ministry for your friend Segu Dawood. There may be some personal benefit too. Now you are telling that SLMC unable deal with these matter and you need a discussion with community.
    Did you discuss the following with Muslims?
    • When you join the government, and then separated during the provincial council election.
    • When you rejoin the government again.
    Now why you are concern about Muslims?
    Are you expecting any election near future?
    Is it northern provincial council?
    Are you planning to contest separately, and then going to join the government?
    Don’t try to fool entire Muslim community.

    ReplyDelete
  2. இப்பிடியே பேசிப் பேசியே முஸ்லிம்கள எமாத்துரானுகள். எவனுகலஎல்லாம் ஏன்தான் அதிதியாக அழைக்கிறீங்க? அவனுக்கல்ல பிழை இல்லை. நம்மள்ளதான்.....

    ReplyDelete
  3. amaicharin ((( முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் தற்போது ஏற்பட்டிருக்கம் சூழ்நிலைகள் குறித்து செயற்படுவதில் போதாத நிலையிருக்கிறது என்ற ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து எமது நிலைப்பாட்டினை இந் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கான முழுமையான கலந்துரையாடல் ஒன்றை மக்கள் முன்னிலையில் விளக்கமளிக்கும் நிகழ்வாக இன்னும் ஓரிரு தினங்களில் மருதமனையில் ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார் ))) endra entha vidayam avarukku mudiyathu. ean endral avarukku paralumandara pirathinithithuvam makkal valangkiyathu ethanai pondra vidayangalai kathippathatkuthan. athi viddu entha edpadellam verum eachchampalam navapppalam kathaithan.

    ReplyDelete
  4. மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே! ,,முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகள் குறித்து செயற்படுவதில் போதாத நிலையிருக்கிறது என்ற ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது,,என்று கூறியுள்ளீர்கள்.செயற்படுவதில் போதாத நிலை,,என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?முஸ்லிம் சமூகம் அனாதரவாக்கப்பட்டு ,நிம்மதியிழந்து மாற்றான் பிள்ளைபோல் தெருவோரத்தில் அலைந்து திரியும் இந்தத்தருனத்தில்முஸ்லிம் சமூகத்திற்காக ,அதன் சுபீட்ஷத்திற்காக எதைச்செய்து கிழித்தீர்கள்.ஒர் முஸ்லிமான அரசியல் அறிஞ்ஞன் என்ற வகையில் எம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இடுக்கண்களை துடைத்தெறிய வேண்டிய கடப்பாடுள்ள நீங்கள்,இந்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைபெற்று,அதனை விற்று கபளீகரம்செய்து விட்டு,இச்சமூகத்திற்கு ஏதேதோ செய்வதாக பம்மாத்து வார்த்தைகளைகூறிய நீங்கள், இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போதும் மௌனம் காப்பதின் மர்மம்தான் என்ன?பின்பு எந்த முகத்தோடு முஸ்லிம் சமூகத்தின் முன் வந்து அரசியல் விளக்கம் அளிக்கப்போகிறீர்கள்.நீங்கள் மனிதனுக்குப்பயப்படவேண்டாம், ஆனால் படைத்த றப்புக்குக்கு பயப்படமாட்டீர்களா?அல்லாஹ் ,உங்களுக்குத்தந்த இந்த பொறுப்புக்கு மறுமையில் உங்களால்என்ன பதில் கூற மமுடியும்.உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனுக்கும் நாளை மறுமையில் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்,இல்லா விட்டால் நீங்கள் இந்த உலகத்தில் பைஸா மேனாக இருக்கலாம். ஆனால் மறுமையில் வங்குறோத்துக்காரனாக(முஃப்லிஸ்) வேண்டி வரும்.இது மதிப்புக்குரிய அமைச்சர் ற.ஹகீம் அவர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிளைக்கும் அனிவரும்தான்.

    ReplyDelete
  5. எதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் எமது முன்னால் தலைவர். பதவிகள் முக்கியமா?? சமுதாய நலன் முக்கியமா?? என்பதை இவர் முதலாவது தீர்மானிக்க வேண்டும். பதவிகளைப் பெற்றால் வீட்டோடு மாப்பிளை போலத்தான், அதற்கு பிறகு ஒன்றும் சோத்துல உப்பில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.

    ReplyDelete
  6. இந்த வீரவசனம் இதைபோல் பல முறை பேசிவிட்டார் எல்லாம் கல்முனையிலும் மருதமுனையிலும் தான் MR கண்டால் பெட்டிப்பாம்பாக மாறிவிடுவார் ஹகீம் மிக நல்ல நடிகன் பார்ப்போமே செயலில் எது வருகிறது என்று.

    ReplyDelete
  7. உங்களது தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு பொது பல சேனாவை விட ஆபத்தானது.....!!! ( மிகவும் பலகீனமான தலைமைத்துவம்)

    உங்களது தலைமைத்துவம் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியலில் ஒரு புற்றுநோய் போன்றது...!!! ( திருத்த முடியாது)

    உங்களது தலைமைத்துவத்தின் பின் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் பயணத்தில் ஏதாவது ஒரு ராஜதந்திரமான முடிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா...??

    உங்களுது அரசியல் சாணக்கியத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த சிறு பேச்சே சான்று பகர்கின்றது...!!! அவர்கள் உலமாக்களை கூப்பிட்டு கதைத்ததன் அர்த்தம் நீங்கள் ஒரு பொருட்டே கிடையாது என்பதுதான்...!!!....

    அவர்களுக்கு அறிவு போதாது என்று கூறுவதை விடுத்து முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதையும் அதற்கான தீர்வையும் அது நிறைவேற்றப்படாது விட்டால் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் கூறுங்கள்.

    பாவம் அப்பாவி முஸ்லிம் மக்கள் / முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்,,,!!!!!

    ReplyDelete
  8. தலைவர் மருதமுனையில் போராளிகளைக் கூட்டப்போகிறார்.
    முக்கியத்துவம் மிக்க முடிவுகள் பல
    எடுக்கப்படவிருக்கின்றன என்றெல்லாம்
    நம்பி ஏமாந்து போக இனியும் நாம் தயாரில்லை.
    நாரே தக்பீர் மற்றும் ஆதவன் எழுந்து வந்தான் பாடல் முதலானவையும்,
    பாமரனை உணர்ச்சி வசப்படுத்தும் கபடத்தனமான உங்கள் பேச்சு முதலானவையும் இனி எம்மை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.
    முடிவுகளை நாங்கள் எடுத்துக் கொள்வோம் . நீங்கள் ...................வியாபாரத்தைப் பார்த்துக்
    கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. ஹகீம் அவர்களே
    கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறோம்
    கதவு, ஜன்னல் வைக்கிறோம்
    கஷ்டப்பட்டு பானை சட்டி செய்கிறோம்
    இறுதியில் இவற்றின் வெற்றிடங்களையே பயன்படுத்துகிறோம்.

    கஷ்டப்பட்டு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டது இறுதியில் வெறும் வெற்றுப் பாத்திரத்தைத்தான் எங்கள் முன் நீட்டுகிறார் ஹகீம்
    செத்து மடிந்து கிடக்கும் முஸ்லிம் அடையாளம், கலாச்சார மரபுகள், ஹலால், மஸ்ஜித், ஹீஜாப் இவற்றுக்கு முன்னால் வெட்கமின்றி எழுந்து நிற்கும் ஹகீமும் அவரைஅழைத்த மருதமுனை மக்களும்.
    ஏய் முஸ்லிம் சமூகமே ஏன் உனக்கு தனி அடையாளம்,
    ஏன் உனக்குத் தனிக் கட்சி
    ஏன் உனக்குத் தலைமைகள்
    ஏன் உனக்கு அரசியல்

    எதுவும் வேண்டாம்
    வாருங்கள் செத்து மடிவோம்
    வாருங்கள் ஒன்றாகச் சேர்ந்து செத்து மடிவோம்.

    ReplyDelete
  10. வீரரர்கள் உதைபந்தாடுவது போல் இந் நாட்டில் முஸ்லிம்களும் பந்தாடப்படுகின்ற சூழலில் முஸ்லிம் அமைச்சர்கள் விளையாட்டைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது தான் வேதனை.

    ReplyDelete

Powered by Blogger.