முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஹசன் அலி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் விவகாரங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்படுவது அவசியமாகுமென அக்கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் மக்களை சந்திக்கும் வேளையில் ஏன் இந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டுமென முஸ்லிம்கள் கேட்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அதிகரித்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸை நோக்கி மக்கள் கேர்விகளை தொடுப்பது இயல்பானதே.
இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், தாம் பங்காளி என்பதால் எல்லாவற்றுக்கும் மௌனம் காத்து நிற்காது, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் அவசியமாகிறது. அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலகிவிடுவதால் மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சினை எல்லாவற்றுக்கும் தீர்வுகள் கிடைத்துவிடாது. அரசாங்கத்திலிருந்தபடியே அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம் சமூகம் மீதான் நெருக்கடிகளை குறைக்க முடியுமெனவும் அர் மேலும் தெரிவித்தார்.
என்ன ஹசன் அலி சார்
ReplyDeleteமு.கா விற்கு வெளியில் நின்று பேசுவது
போல் பேசுகிறீர்கள்.
அழுத்தம் கொடுக்கவேண்டிய நீங்களே ஒரு மூன்றாம் நபரைப் போல் பேசி ஏன்
தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள்?
அழுத்தம் கொடுத்துக் கொடுத்து அயர்ந்து போய்விட்டீர்களா?
அல்லது நீங்கள் நம்பி நனைந்த
அரை கால் எல்லாம் இல்லை என்றே ஆகிவிட்டதா?
அழுத்தம் என்றால் மு.கா முக்கும்.
எதற்கும் றிசாட்டிற்கு ஓர் ஓலை அனுப்பிப்
பாருங்களேன்.
என்னமோ TULF கட்சி உறுப்பினர் மாதிரி அறிக்கை விட்டு இருக்காரு நீங்க எந்த எந்த கட்சி சாரே
ReplyDeleteகல்யாணத்துக்கு வாழ்த்து பாட அழைத்தால் கர்மாதிக்கு வந்து ஒப்பாரி வைக்கும் கலை மு.காங்கிரஸுக்கு கைவந்த கலை.அரசாங்கத்துக்கு
ReplyDeleteஅழுத்தம் கொடுப்பார்களோ,அழுத்தி விடுவார்களோ தெரியவில்லை.
ஆனால் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டை நடத்தி முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிவிடுவார்கள்போல்தான் தெரிகிறது.
Hi
ReplyDeleteAre you advising SLMC? You are the secretary of the SLMC, therefore you have to take the action to pressurize government. Are you merely making this statement for sake of making statement? You are a clever man; you did not forget to mention that you are not willing to leave the government. You can cheat Muslims but not Allah.