Header Ads



பலஸ்தீனத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம்


(Tn) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்க ளுக்கு அதனை அடையாளப் படத்தும் விசேட முத்திரை இடப்பட வேண்டும் என தென்னாபிக்க அரசு அறிவித்துள்ளது.

“நுகர்வோர் தீர்மானத்திற்காக தகவலை அளிக்கும் வகையில் குறித்த பொருட்கள் எங்கிருந்து வருகின்றது என்பது அடையாளப்படு த்தப்பட வேண்டும்” என தென்னாபிரிக்க வர்த்தக மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் பேச்சாளர் சிட்வெல் மெடுப் குறிப்பிட்டுள்ளார்.” நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொருட்களின் மூலம் பற்றி நுகர்வோருக்கு தகவல் பெறும் உரிமை இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி தென்னாபிரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்ரேலிய பொருட்களை எதிர்காலத்தில் ‘இஸ்ரேலிய உற்பத்தி’ என பொதுவான சொல்லில் அடையாளப்படுத்த முடியாது. அந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட வேண்டும். இதில் இறக்குமதிப் பொருள் காசாவில் இருந்து வருவதாயின் அது ‘காசா - இஸ்ரேல்’ என அடையாளப் படுத்தப்பட வேண்டும். அதேபோன்று மேற்குக் கரையெனில் மேற்குக்கரை- இஸ்ரேல் என்றும் ஜெரூசலத்திலிருந்து எனின், கிழக்கு ஜெரூசலம் - இஸ்ரேல் என்றும் முத்திரை இடப்பட வேண்டும். இதன்மூலம் மேற்படி உற்பத்திகள் இஸ்ரேலுடையது அல்ல என்பதை உறுதி செய்ய முடியும் என தென்னாபிரிக்க அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.