சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களின் உருக்கமான வேண்டுகோள்
சவூதி அரேபியா - ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களாகிய தாம் நிர்க்கதி நிலையில் உள்ளதாக அங்கிருக்கும் சகோதரர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுரகம் எத்தகை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அங்குள்ள சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சகோதரர்கள் தமது கவலைகளை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
சாப்பிடுவதற்கு உணவு இல்லையனெவும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லையெனவும், கையில் பணம் இல்லையெனவும், அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குறித்த பாலத்திற்கு கீழ் இலங்கையர்களுடன் சேர்ந்து 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணப்படுவதாகவும், அங்கு சுகாதாரம் மிகவும் கீழ்மட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
அதேவேளை இதுகுறித்து மேலும் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் கீழ்வருமாறு,
சவூதி அரேபியாவிலுள்ள சில அதிகாரம் மிக்கவர்கள் தம்முடன் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டதகவும் அவர்கள் கூறினர்.
தாம் இலங்கையில் இருந்தபோது தம்மீது பெற்றோர்கள் கூட, அடித்ததில்லையென தெரிவித்த அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்து இங்கு, மற்றவர்கள் தம்மீது இலங்கையர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அடிப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில் தாம் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றவோ அல்லது தங்கியிருப்பதற்கோ தயாரில்லையென கூறிய அவர்கள் தம்மை உடனடியாக தமது தாய் நாட்டுக்கு அனுப்பிவைக்க மிகவும் உருக்கமான முறையில் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை இவ்விடயங்கள் குறித்து மேலதிக விடயங்கள் அறிவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையம் பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும் எமது முயற்சி பலன்தரவில்லை.
those embassy persons only has put them out those who cam to the embassy for requesting relief, offices has hit and put the police and evacuate the those people. what kindful people in our embassy.
ReplyDelete