யாழ் சோனகதெருவில் சட்டவிரோத வாகன தரிப்பிடங்கள் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் சோனகத்தெரு பகுதியில் பல வீதிகள் சட்டவிரோத வாகன தரிப்பிடங்களாக பயன்படத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஹாதி அபூபக்கர் வீதி,ஆசாத் வீதி, கல்லூரி வீதி ஆகிய வீதிகள் வாகன உரிமையாளர்கள் தரிப்பிடங்களாக பாவிக்கின்றனர்.
மேலும் நாள், கிழமை கணக்காக சில வாகனங்கள் குறித்த வீதிகளில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வீதியால் பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்விடயம் சம்பந்தமாக வாகன உரிமையாளர்களுடன் பொதுமக்களில் சிலர் உரையாடும் போது அவர்கள் தாக்க முற்படுவதுடன் கெட்ட வார்த்தைகளால் தூசிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
எனவே யாழ் போக்குவரத்து பொலிசார் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகொள் விடுக்கின்றனர்.
Post a Comment