Header Ads



கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்த உலகின் முதல் பெண் கர்ப்பமடைவு

மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட, உலகின் முதல் பெண், கர்ப்பமடைந்துள்ளார். துருக்கியைச் சேர்ந்தவர் தேர்யா சிர்த். பல லட்சம் பெண்களில் ஒருவர், கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கின்றனர். தேர்யாவும் அவர்களில் ஒருவர். 

கடந்த 2000ம் ஆண்டு, சவுதி அரேபியாவில், ஒரு பெண்ணுக்கு, உயிருடன் உள்ள பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாகப் பெற்று பொருத்தப்பட்டது. ஆனால், உடலுடன் பொருந்தாததன் காரணமாக, 99 நாட்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.

மறுபடியும் இம்முயற்சி தோல்வி அடையாமல் இருக்க, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, 18 மாதங்களுக்கு முன்பிருந்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, தேர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு, இறந்த பெண்ணின் கர்ப்பப்பை பொருத்தப்பட்டுள்ளது. இவரின் கருப்பையில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரு செலுத்தப்பட்டு, தற்போது, இரண்டு வார கருவாக வளர்ந்துள்ளது.இவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் முஸ்தபா உனால் கூறியதாவது,

கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்த உலகின் முதல் பெண்ணான தேர்யா, தற்போது கர்ப்பமடைந்துள்ளது மருத்துவ சாதனையாகும். கரு நன்கு வளர்ந்த பின், அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டு, "இன்குபேட்டர்' உதவியுடன், எந்தவித குறைபாடுகளும் ஏற்படாவண்ணம் வளர்க்கப்படும், என்றார்.

No comments

Powered by Blogger.