Header Ads



கணவன் குடிபழக்கம் - கர்ப்பிணி மனைவி தற்கொலை, துயர் தாங்காது கணவனும் சாவு


கணவனின் குடிப்பழகத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. தமது கணவன் குடிப்பழக்கத்திற்கு ஆளான நிலையில், கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிசியை ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி இவ்வாறு அவர் தீ மூட்டிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர் தீக்காயங்களுடன் கம்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட ஆசிரியருக்கு 27 வயது என கம்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமது மனைவி இறந்த செய்தியை அறிந்த கணவன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் 28 வயதாக முச்சக்கர வண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனையில், குறித்த பெண் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்த நிலையில்,  2 மாத கர்பிணியாகவும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

1 comment:

  1. சம்பவம் (மனைவி) தற்கொலை தான் என்றால், இருவரும் அநியாயக்காரர்கள். மனைவி ஒருபடி மேல். இரண்டு உயிர்களை காவுகொண்டுவிட்டாள். அவன் சரியில்லை என்றால், திருத்த முடியாதென்றால் விவாகரத்து பெற வேண்டியது தானே. வாழ்க்கையை எதிர் கொள்ளத் தெரியாத கோழை. நாட்டில் இது போன்ற உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்கு சரியான தீர்வை முன்வைக்க வேண்டிய அதிகாரிகளும், அரசும் என்ன செய்கின்றன? அரசென்றால் இனவாதத்தைத் தூண்டுவதில் பிஸி.

    ReplyDelete

Powered by Blogger.