கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் அறுவடை நிகழ்வு..!
'நாம் இன்று செடி ஒன்று நடுவோம் நாளை பயன்பெருவோம்' என்ற தொனிப்பொருளுக்கு அமையவாக வலயக் கல்வி அலுவகத்தில் நடப்பட்ட வெண்டிச் செடிகளில் இருந்து வெண்டிக் காய்களை அறுவடை செய்யும் நிகழ்வு 2013.04.16 ஆம் திகதி வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் போது வெண்டித் தோட்டத்தினைப் பராமரித்து வந்த எம்.எச்.எம்.கலீல், விவசாய ரீதியாக ஆலோசனை வழங்கிய விவசாயப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம் இபாதுள்ளா, மற்றும் ஏனைய உழியர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்தார்.
இதேபோல் கல்வியில் ஆர்வம் காட்டினால்?
ReplyDelete