Header Ads



நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள் (படங்கள்)



(j.m.hafees)

நுவரெலியாவில் வசந்கால கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. நுவரெலியாவில் வழமைபோல் இவ்வருடமும் வசந்தகாலக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் களியாட்ட விழாக்கள் மலர் கண்காட்சி உற்பட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

இவ்வருடம் வழமைக்கு மாறாக 'ஜலகிரீடா' எனப் படும் பல்வேறு நீர் சருக்கள் விளையாட்டுகளும் படகோட்டப் போட்டி, படகுச் சவாரி, குதிரை ஓட்டப் போட்டி போன்ற பலவும் மக்கள் மனம கவர்ந்துள்ளன. நீரியல் விளையாட்டுக்கள் கிரகெரி வாவியில் இடம் பெறுகின்றன. இலங்கை கடற்படையினர் இதற்கான ஏற்பாடுகளையும், மேற்பார்வையையும் மேற்கொண்டுள்ளனர்.







1 comment:

  1. அன்புக்குரிய முஸ்லிம்களே! நாலா புரங்களிலும் சோதனைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நாம் வசந்த கால கொண்டாட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ பல்லாயிரம் ரூபாக்களை அழிப்பதை அல்லாஹ் பொருந்துவானா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
    நபி (ஸல்) கூறிய பின்வரும் ஹதீஸை சற்று சிந்தித்துப் பார்ப்போம்.''மறுமையில் எந்தொரு அடியானும் நான்கு வினாக்களுக்கு பதிலளிக்காத வரை அவனது பாதத்தை அசைக்க முடியாது. அவனது வாழ்நாளை அவன் எவ்வாறு கழித்தான்? அவனது வாலிபத்தை எவ்வாறு கழித்தான்? அவனது பணத்தை எவ்வாறு சம்பாதித்தான்? எவ்வழியில் செலவளித்தான்? அவன் கற்ற அறிவின் மூலம் அவன் செய்த வணக்க வழிபாடுகள் என்ன?''
    எனவே அந்நிய ஆண்கள், பெண்கள் ஒன்றாகப் படை சூழும் இவ்வாறான Season களியாட்டங்களில் கலந்து, பணத்தை வீண் விரயம் செய்து, தொழுகைகளை வீணடித்து இறைவனின் சோதனைகளை மேலும் மேலும் அதிகரிக்கும் வழிகளைக் கைவிட ஒவ்வொரு முஸ்லிமும் திடசங்கம் கொள்வார்களாக.
    ''கரையிலும், கடலிலும் ஏற்படும் குழப்பங்களுக்கான காரணம் மனிதர்களின் கரங்கள் செய்யும் தவறுகள் தான்'' (அர்ரூம்: 41)

    ReplyDelete

Powered by Blogger.