எமது நாடும், இஸ்லாமிய பிரச்சாரமும்..!
(இஸ்மாயில் மர்சூக்)
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் ஈமானிய சகோதர சகோதரிகளே ...
நாம் வாழும் எமது நாட்டின் தற்போதய சூழ்நிலைகளும் தான் இந்த கட்டுரையை எழுத உரம்மூட்டியவை. இந்தவகையின் இந்நாட்டில் எமது வாழ்வமைப்பை அமைத்துக் கொள்வதும் தஃவா செய்வது குறித்தும் கீழ் வரும் மூன்று முறைமைகளை நோக்கலாம்.
01. அக்கீதாவில் முரண்படாத கொள்கை சார்ந்திருத்தல்.
அதாவது எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் இஸ்லாமிய இயக்க சிந்தனைகள் குறித்தவை அதாவது எமது ஒறறுமையின்மைக்கு 90 வீதம் பங்களிப்பது இயக்க சிந்தனையின் இருக்கமும் விட்டுக்கொடுக்கமையும், தனது கருத்தையே நியாயம் காண்பதும் ஆகும் இதற்கு பிரதாணமாக அமைவது வேற்று நாடுகளின் காணப்படும் சிந்தனைகளை அதே ஒழுங்கில் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த எத்தனிப்பது ஆகும். இந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து காணப்படுமாயின் இன்னும் சில காலங்களில் பாரிய இழப்புக்களை நாம் இந்நாட்டில் இழக்க நேரிடும் இதற்காண அர்த்தம் இயக்கங்களை விமர்சிப்பது அல்ல.
மாற்றமாக இயக்கங்கள் தமது நிலைப்பாட்டுக்களையும் தஃவா ஒழுங்கமைப்புக்களையும் நமது நாட்டு முறைமைக்கு ஏற்ப மாற்றியமைப்பது ஆகும் இதனை உணர்ந்து கொள்வதற்கு இதுவரைகாலமும் இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்களின் வெற்றி நிலைமை குறித்து நோக்கினால் அது அடிமட்டமாகவே காணப்படுகின்றது, இவற்றில் அமைப்புக்களில் இருக்கும் நபர்கள் 10 வீதம் என்றால் வெளியில் மிகுதி 90 வீதமான மக்கள் இருக்கின்றார்கள். எனவே தான் இந்நாட்டில் தஃவா களத்தில் செயற்பட நினைப்பவர்கள் பிரதாமா தமது நிலைப்பாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான படிமுறைகளில் மாற்றம் காண முயற்சிக்க வேண்டும் இத்தருனத்தில் அக்கீதாவில் முரண்படாதவர்களை மதித்து நடக்க வேண்டும் இக்கருத்துக்களை பல அறிஞர்கள் தெரிவித்தும் இன்றுவரை இவ்விடயத்தில் ஒற்றுமைபட்டதாக தெரியவில்லை எனவே இவ்விடயங்களில் அவசரமாக ஒற்றுமை காண வேண்டும்.
02. நம் நாட்டு மக்களுடன் கலந்து வாழும் போது எம்மை அதில் முழுமையாக கரைந்து போகாமல் பாதுகாப்பது.
அதாவது நமது நாடு பெரும்பான்மை சகோதரா்களை கொண்ட நாடாகும் இந்நாட்டில் நாம் வாழும்போது அவர்களுடன் நிச்சயமாக கலந்து தான் வாழவேண்டிய சூழ்நிலைகள் காணப்படுகின்றது அவை பாடசாலை,வைத்தியசாலை,சந்தை,பல்கழைக்களகம் என்று அனைத்தும் விதமான இடங்களிலும் அவர்களுடனே கலந்து வாழவேண்டியுள்ளது எனவே இந்நிலைப்பாடுகளில் நாம் அவர்களுடன் இசைந்து வாழவேண்டி உள்ளது இதன்போது நாம் அவா்களுடன் கலக்கும் போது எம்மை கரைத்து போகமல் பாதுகாப்பது என்பதுதான் முதன்மையான செயற்பாடாக காணப்படுகின்றது இந்த வகையில் நமது வாழ்விடங்களை குறிகிய நில அமைப்புக்களுக்குள் சுருக்கி கொள்வது என்பது உறுதியாக ஈமான் கொண்டவா்களுக்கான அடையாளமாக இருக்காது உறுதியாக ஈமான் கொண்டவா்கள் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் அனைத்து மக்களுடனும் கலந்து வாழ்ந்தாலும் தம்மை பாதுகாத்துக் கொண்டு ஏனையே சமூகத்தினரையும் தமது அகலாக்கின் மூலம் ஈர்த்து கொள்வார்கள். இக்கருத்துக்களை நம்நாட்டு நடுநிலை அறிஞா்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருவது குறிப்பிடதக்கதாகும்.
03. நம் நாடும் நமது மொழி ஆளுமைகளும்.
எமது நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியாக காணப்படுவது சிங்கள மொழியாகும் இதில் எமது சமூகத்தினருக்கு எத்தனை வீதம் பாண்டித்தியம் உள்ளது என்று நோக்கினால் நிச்சயம் இதில் பாரிய குறைபாடே காணப்படுகின்றது. எனவே இலங்கை நாட்டில் தஃவா செய்ய நினைக்கும் அனைவரும் நிச்சயம் சிங்கள மொழியினை கற்பதினை ஒரு பிரதாணமாக கொள்ளவேண்டும் அப்போதுதான் நமது நாட்டில் தஃவா செய்ய முடியும் இதனை தூரநோக்கு சிந்தனை கொண்ட யாவரும் புரிந்து கொள்வார்கள் அது மாத்திரமன்றி நமது குழந்தைகளையும் சிங்கள மொழிமூலமாக கற்பிக்கவேண்டும் அதுவும் நமது மொழி விடயங்கள் குறித்து பாரிய மாற்றம் காண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இது குறித்து சிந்திக்கும் போது இலங்கை நாட்டில் எந்த மொழி பிரதாணமோ அந்த மொழிக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும் அப்போது தான் நாம் நினைக்கும் மாற்றங்களை இலங்கையில் காணமுடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எனவே அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே நாம் நமது நாட்டை நேசித்து இந்நாட்டு ஒழுங்கமைக்கு ஏற்ற வகையில் நாம் ஒற்றுமையுடன் பிரமதத்தவர்களை மதிப்பதுடன் அவர்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டில் வாழ்வது என்றும் புரிந்து அதற்கேற்றவாறு நமது வாழ்வமைப்பை மாற்றிக் கொள்ளவேண்டும் இதற்கு வேறு எங்கேயும் படிப்பினைகள் தேடவேண்டியது இல்லை இதனை எமது அன்பிற்குறிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் அதாவது மக்கா காலங்களில் நபி (ஸல) வாழ்ந்து காட்டியதும் மதினா காலங்களில் முஹம்மது நபி (ஸல்) வாழ்ந்து காட்டியதும் இந்தவகையில் இலங்கை சூழலினை பொருத்தமட்டில் மக்கா காலத்தில் நபி (ஸல்) வாழ்ந்து காட்டிய முறைமைகளை பேணுவோம் என்றால் பொருத்தப்பாடாக இருக்கும்.
நீங்கள் என்னதான் சிங்களம் பழகினாலும் நீங்கள் நினைத்ததை உங்களால் அடைய வேண்டும் என்றால் ,அதற்கு முன் பிற சகோதர இன மக்களின் இயல்பு அதாவது அவர்களின் நாடி துடிப்பை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் அடிப்படையில் ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்தவன்,எனது ஒத்த வயதுடைய நண்பனின் சகோதரன் 10ம் வகுப்பில் கல்வி கற்கிறான். அவன் தனியார் வகுப்பிற்கு சென்று வருகிறான். அங்கு நண்பனாக அறிமுகமான சக முஸ்லிம் மாணவன் ஒருவர் இஸ்லாத்தை பற்றியும் மார்க்கம் பற்றியும் பேசியுள்ளார் அதாவது பழிக்கு பழி வாங்குவது தப்பில்லையாம், ஒருவர் காரில் ஏற்றி ஒருவரை கொலை செய்தால் அவரையும் அதன் படியே கொல்ல வேண்டுமாம் அதில் தப்பு ஒன்றும் இல்லையாம். பின்னர் (சாகிர் நாயக்) இனுடைய CD ஒன்றும் தரவா என்றும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் நான் நிறைய பிள்ளைகளிடம் இருந்து கேள்வி பட்டிருக்கேன் ஏன் நான் A/L படிக்கும் போது கூட எனக்கும் இவ்வாறு நடந்திருக்கிறது. அனால் இதில் என்ன தவறு இருக்கிறது இது ஒன்றும் பெரிய விடயம் ஒன்றும் இல்லை தானே என்று முஸ்லிம் ஆகிய நீங்கள் நினைக்கலாம். மாறி ஹிந்து அல்லது பெளத்த மதத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் ஹிந்து மற்றும் பௌத்தர்கள் சிறுபான்மையகவும் வாழும் ஒரு நாட்டில் சிவபெருமானை பற்றியோ சிலை வழிபாட்டின் மகத்துவத்தை பற்றியோ அல்லது புத்த பெருமானின் தியான கலை CD களை தரவா என்று ஒரு முஸ்லிம் மாணவனிடம் கேட்க அதை அம்மாணவன் தனது குடும்பத்தினரிடம் போட்டு குடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு எரிச்சல்,கோபம் வரும் என்பதை நினைத்து பாருங்கள். எவ்வளவு விபரீதம் எல்லாம் நடந்திருக்கும்.
ReplyDeleteமுதலில் உங்கள் மதத்தை போன்று மற்ற மதத்தையும் மதியுங்கள். ஆனால் உங்களால் முடியாதே? இஸ்லாம் மட்டும் தானே இந்த உலகில் இருக்க வேண்டும்.(என்னை பொறுத்த வரை நீங்கள் எழுதிய கட்டுரை (சிறந்த நகை சுவை) சுத்த வேஸ்ட் நண்பா...)
சகோதரர் நண்பன் அவர்களே! நானும் ஒரு உதாரணம் சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள். ஒரு மனிதர் வீதியால் சென்று கொன்டிருக்கிறார். ஆனால் அவர் செல்கின்ற பாதையில் ஏதோ ஆபத்து உள்ளது அதில் பயனிப்பது ஆபத்தானது என்று அறிவித்தல்கள் போடப்பட்டிருந்தும் அவற்றினை அறியாது அந்த மனிதன் தொடர்ந்தும் அதில் பயனிக்கிறான். இதனைக் கண்ட ஓர் நல்ல மணிதர் நீங்கள் போகின்ற பாதை விபரீதமானது. சரியான ஆபத்தில்லாத பாதை இதோ இருக்கிறது இதனால் செல்லுங்கள் என்று வழிகாட்டிவிடுகிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது? . இதைத்தான் சாக்கிர் நாயக்கும் செய்கிறார். முஸ்லிம் அமைப்புகளும் செய்கிறது?................ ஆனால் பழிக்குப் பழி தீர்த்தல் தொடர்பாக சாக்கிர் நாயக் கூறியதாக நீங்கள் தெரிவித்துள்ள விடயம் அவர் கூறியதற்கு வித்தியாசமாகவுள்ளது. பழிக்குப் பழி செய்துதான் ஆக வேன்டும் என்று கூறவில்லை பழிக்குப் பழி வாங்குவதற்கு அனுமதி உள்ளது. இருந்தும் மண்ணிப்பு வழங்குவதே மிகவும் மேலான நன்மை தரும் காரியமாகும். என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு .. சகோதரரே இன்னும் நீங்கள் .இஸ்லாத்தினை ஆழமாக படியுங்கள் உண்மை உங்களுக்கு மிக அன்மையிலேயே உள்ளது.உங்களுக்கு இறைவனின் சாந்தி உண்ணடாகட்டும்.
ReplyDeletenanban eandra n sahotharanukku avarai innum kulappamal avarukku puriyumpadiyaha vilakkam thara mudiyumanavarkal mattum pathil thara wendum eandru eathiparkiren. nanba oru cdyil iththanai periya thavaru iruppathaha eanakuththeriyavillai. ean oru cdyai pathu iththanai payappada wendum? silaivanakkaththil aththanai mahaththuvam irunthal pls eamakkum solliththarungal eamathu pahuththarivu eatrukkollumayin athaippotra thayarai irukkirom.
ReplyDeleteநண்பரே நீங்கள் புரிந்துள்ள நிலைப்படி உங்கள் (நண்பன்) உங்கள் கேள்வி நியாயமாக இருந்தாலும், உண்மை அது அல்ல. மாறாக நீங்களோ, உங்களின் நண்பர்களோ சந்தித்த முஸ்லிம் சஹோதரரின் மார்க்க அறிவில் உள்ள குறைபாடே உங்களை இவ்வாறு பேச வைத்துள்ளது.அதற்காக வருந்துகிறோம். உண்மையில், வழிகாட்டல் என்பதும் பிரசாரம் என்பதும் வெவ்வேறானது. தெளிவான வழிகாட்டல் புனித அல் குர்ஆனில் உண்டு. ஆனால் பிரசாரம் மனிதர்களால் மேட்கொள்ளப்படுபவை.அவற்றில் (பிரசாரத்தில்) உள்ள தவறால் ஒட்டு மொத்த இஸ்லாத்தை தயவு செய்து குறை சொல்லாதீர்கள். நிச்சயமாக எமக்குள்ள வழிகாட்டல் பரிசுத்தமானது நண்பரே!!!!
ReplyDeleteநண்பரே நீங்கள் புரிந்துள்ள நிலைப்படி உங்கள் (நண்பன்) உங்கள் கேள்வி நியாயமாக இருந்தாலும், உண்மை அது அல்ல. மாறாக நீங்களோ, உங்களின் நண்பர்களோ சந்தித்த முஸ்லிம் சஹோதரரின் மார்க்க அறிவில் உள்ள குறைபாடே உங்களை இவ்வாறு பேச வைத்துள்ளது.அதற்காக வருந்துகிறோம். உண்மையில், வழிகாட்டல் என்பதும் பிரசாரம் என்பதும் வெவ்வேறானது. தெளிவான வழிகாட்டல் புனித அல் குர்ஆனில் உண்டு. ஆனால் பிரசாரம் மனிதர்களால் மேட்கொள்ளப்படுபவை.அவற்றில் (பிரசாரத்தில்) உள்ள தவறால் ஒட்டு மொத்த இஸ்லாத்தை தயவு செய்து குறை சொல்லாதீர்கள். நிச்சயமாக எமக்குள்ள வழிகாட்டல் பரிசுத்தமானது நண்பரே!!!!
ReplyDelete