Header Ads



நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை சவூதி அரேபியா திருப்பியனுப்புகிறது


(Nf) சவுதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகி ஜித்தா பாலமருகில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்களை நாளாந்தம் 25 பேர் வீதம் இலங்கைக்கு திருப்பியனுப்ப சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜித்தாவில் உள்ள இலங்கை கன்சியுலர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் சவுதி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பும் வரை தற்போது அவர்கள் பணியாற்றும் இடங்களில் பணியாற்றவும் சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜித்தாவில் உள்ள பாலத்திற்கு அருகில் தங்கியுள்ள தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும் தம்மை நாட்டிற்கு அழைத்துவர எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கைப் பணியாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பணியாளர்களை சந்திப்பதற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தாம் சென்றதாகவும் அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் ஜித்தாவிலுள்ள கன்சியுலர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் M.P.M.சாரூக் தெரிவித்தார்.

தொழில் நிமிர்த்தம் சவுதி சென்று நிர்க்கதிக்குள்ளான சுமார் 1200 இலங்கைப் பணியாளர்கள் ஜித்தா பாலமருகே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.