ரோஹிங்கிய முஸ்லிம்கள் அடக்க மியன்மாரில் அவசர கால சட்டம் நீடிப்பு
(மக்தூம்)
மேற்கு மியன்மார் அராகான் மாநிலத்தில் அமைந்துள்ள மொங்க்டாவ் நகரில் பர்மிய அதிகாரிகளினால் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு அவசரகால சட்டம் (144) நீடிக்கப்பட்டுள்ளது என மொங்க்டாவ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் பௌத்தமத தண்ணீர் பண்டிகையின் போது முறைகேடான சம்பவங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராகீன் பௌத்த தீவிர வாத கும்பலுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மூண்ட கலவரத்தை அடக்கவே கடந்த 10 ஜூலை 212 முதல் அவசர கால சட்டம் அமுலுக்கு வந்தது.
அன்று முதல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப் பட்டு வருவதோடு அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டும், அழிக்கப் பட்டும் வரும் அதேவேளை ராகீன் பௌத்தர்களுக்கு எந்த பாதிப்பும் இதன் மூலம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
யாரால், யாருக்கு முறைகேடான சம்பவம்? யார் அடக்கப்பட வேண்டியவர்? ரோஹிங்கியர்களை அடக்கிவைத்து தண்ணீர்ப் பண்டிகையா? அல்லது முஸ்லிம்களுக்கெதிராக பெட்ரோல் பாம் பண்டிகையா நடத்தப் போகிறார்கள்? இது ஒரு அரசாங்கம் இதற்கு காட்டு தர்பார் நடத்த ஏற்றால் போல சட்டம் வேறு.
ReplyDelete