தங்கத்தின் விலை குறைகிறது
இரண்டு வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலை மிகவும் குறைந்த மட்டத்தை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம், வலுவடைந்து உயரும் டாலர் மதிப்பீடு, சைப்ரஸ் பெருமளவில்
தங்கத்தை விற்கக்கூடும் என்ற நிலையில் மிக அதிக அளவில் தங்கத்தின் விலை
உயர்ந்திருந்தமை இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் தங்கத்தின் விலை பன்னாட்டு
சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.
இவ்வாறு வீழ்வதைக் கண்டு தங்கத்தில் முதலீடு செய்வோரும் அதை விற்கத் தொடங்க
வீழ்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த சரிவு நடுத்தர மற்றும் ஏழை
பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிக எண்ணிக்கையில் நடுத்தரவர்க்கத்தினர்
நகைக்கடைகளுக்கு விரைந்து இயன்றவரை தங்க நகைகளை வாங்குவதாக நகைக்கடை உரிமையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பரந்த அளவில் சரக்குப் பொருட்களின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேசத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. உலகில் இரண்டாவது பாரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Post a Comment