சவூதி அரேபியாவில் 70 இலங்கையர்கள் கைது
(Nf) சவுதி அரேபிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் 70 பேர் தமாமிலுள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீசா காலாவதியான மற்றும் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் அந்த முகாமில் உரிய வசதிகள் இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து சவுதியிலுள்ள இலங்கைத் தூரதரகத்திற்கு அறிவித்துள்ள போதிலும் அதற்கு எந்தவித சாதகமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
தூதரக அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக சுகவீனமடைந்திருந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழக்க நேரிட்டதாகவும் தமாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து வினவியபோது தமாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்துப் பார்ப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று தடுப்பு முகாமிற்கு சென்றிருந்ததாக சவுதி அரேபியாவிற்கான இல்கைத் தூதரகத்தின் அமைச்சின் அலோசகர் அனுர முத்துமால தெரிவித்துள்ளார்.
அங்கு தங்கியுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்காக சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment