குவைத் மன்னரை விமர்சித்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு 5 வருட சிறை
குவைத்தின் மன்னரான எமீர் ஷேக் சபா அல் அஹ்மது அல் சபாவை இழிவாகப் பேசிவிட்டார் எனக் குற்றம்சாட்டி அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான முசல்லம் அல் பர்ராகிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் உரையாற்றிய அல் பர்ராக், குவைத்தை எதேச்சதிகார ஆட்சியின் அதலபாதாளத்துக்கே எமீர் இட்டுச்செல்வதற்கு மக்கள் அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
குவைத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமாகிய அல் பர்ராக்கை சிறையில் தள்ளினால் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என எதிர்க்கட்சிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
சமீபத்தில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அரசாங்க விமர்சகர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் குவைத்தில் சிறையில் தள்ளப்பட்டிருந்தனர்.
Post a Comment