4 மில்லியன் மரக் கன்றுகளை நடும் தேசிய திட்டம் - கிண்ணியாவிலும் ஆரம்பம்
'நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்' என்ற தொனிப்பொருளுக்கு அமைய தமிழ்,சிங்களப் புத்தாண்டின் சுபவேளையில் நான்கு மில்லியன் மரக் கன்றுகளை நடும் தேசிய திட்டத்தின் கீழ் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று 14-04-2013 தென்னை, மா, மாதுளை போன்ற மரக் கன்றுகளை நட்டும் வைபவம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம் .ஐ. சேகு அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கிண்ணியா பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி நளிம், பிரதிக் கல்விப் பணிப்பளர் ஏ. நசுர்கான், பிரதிக் கல்விப் பணிப்பளர் எம்.சி. முகம்மட் நஸார், சிறப்பு விருந்தினராக விவசாயப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம் இபாதுள்ளாஹ், கௌரவ விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு ரஹ்மான், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு அனிபா, உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு நஜிமுதீன் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தின் சகல ஆசிரிய ஆலோசர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment