சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் - 30 பேர் மரணம்
சோமாலியா தலைநகர் மொகாடிஷூ நீதிமன்றத்திற்குள் புகுந்த தற்கொலைப்படை அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், பின்பு சுதாரித்துக்கொண்டு திருப்பி தாக்குதல் நடத்தினர்.
அப்போது தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தலைநகரில் இருவேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்னர்.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இது அல்கொய்தாவுடன் தொடர்புடைய, அல் சபாப் என்ற இயக்கத்தின் வேலையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த இருபது வருடங்களாக சோமாலியா, பிரச்சினையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment