Header Ads



முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள் - 2800 பேருக்கே இம்முறை ஹஜ் செய்ய அனுமதி


(எம். எஸ். பாஹிம்)

ஹஜ் யாத்திரை செல்வதற்காக இதுவரை 6600 பேர் விண்ணப் பித்துள்ளதாகவும், இதில் தகுதி யானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார்.

ஹஜ் முகவர்களுக்கு இதுரை அனுமதி வழங் கப்படாததால் முகவர்களுக்கு பணம் கொடுத்து எவரும் ஏமாற வேண்டாம் எனவும் ஹஜ் யாத்திரிகளிடம் கூடுதல் பணம் அறவிட்டு உரிய சேவை வழங்காத முகவர் குறித்து எழுத்து மூலம் அறிவித்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 2013 ஹஜ் யாத்திரை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஹஜ் யாத்திரை செல்வது தொடர்பில் முஸ்லிம்களின் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதன் முறையாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கே இம்முறையும் முன்னுரிமை வழங்கப்படும். ஹஜ் யாத்திரை செல்வதற்காக இதுவரை 6600 பேர் பதிவு செய்துள்ளனர். ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் அனைவரும் 25 ஆயிரம் ரூபா செலுத்தி தம்மை பதிவது கட்டாயமாகும். இம்முறையும் 2800 பேருக்கே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எமக்குரிய கோட்டாவை அதிகரிப்பது குறித்து சவூதி ஹஜ் விவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளேன்.

பதிவு செய்துள்ளவர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் இதுவரை எந்த முகவருக்கும் ஹஜ் யாத்திரைக்கு ஆட்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. எனவே யாரும் முகவர்களுக்கு பணம் வழங்கி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கடந்தமுறை ஹஜ் முகவர்கள் கூடுதல் பணம் அறவிட்டதாகவும் யாத்திரிகர்களுக்கு ஒழுங்கான சேவை வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் எவரும் எமக்கு எழுத்து மூலம் அது குறித்து முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. சிலர் முறையிட தாயாரான போதும் முகவர்கள் சிலர் கெஞ்சிக் கூத்தாடி அதனை நிறுத்தியுள்ளனர்.

ஹஜ் முகவர்கள் குறித்து முறைப்பாடுகள் இருந்தால் தற்பொழுது கூட எமக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும். 2013 ஆம் ஆண்டிற்கான ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் போது இது குறித்து கவனித்து தகுதியானவர்களை தெரிவு செய்யலாம். முகவர்கள் தாம் வழங்கும் பணத்திற்கு ஏற்ப உரிய சேவை வழங்க வேண்டும். இது குறித்து நாம் அவதானமாக இருப்போம்.

4 comments:

  1. உங்களை நம்பி ஏமார்ந்து விட்ட பிறகு முகவர் வேற பாக்கியா? எல்லாவற்றையும் ஜமீயதுல் உலமா பக்கம் திருப்பிவிடும் அரசியல்வாதிகளான நீங்கள் இந்த விடயத்தை மட்டும் உங்கள் வசம் வைத்திருப்பதன் ரகசியம் தான் என்ன? உழைப்புத் தானே!!!

    ReplyDelete
  2. முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்! "எங்களை நம்பி ஏமாறுங்கள்!!!

    இந்த ஹஜ், உம்ராஹ் விடயத்தில் இன்னும் ஒரு நேர்த்தியான கட்டமைப்பு இல்லை. அப்படி ஒன்று உருவாவதை சம்பாதிப்போர் விரும்புவதும் இல்லை!

    போன வருடமும் சொன்னீர்கள்! கடைசியில் யாத்திரிகள் அதிகமான பணம் கொடுத்துப் போக வேண்டிய நிலையை உருவாக்கி இருந்தீர்கள். மட்டுமன்றி மொத்தமாய்ப் பெற்றதாலோ என்னவோ மௌனமாயும் இருந்தீர்கள்.

    பருவ காலங்களில் இடம் பெயரும் பறவைகள் அந்தந்தக் காலத்தில் எங்கெங்கே உணவுகிடைக்குமோ அங்கே செல்லும். அதே போன்று நீங்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்கும் விடயம் என்றால், உங்கள் அறிக்கைகளும், அறிவுறத்தல்களும் அந்தந்தக் காலங்களில் (சம்பாதிக்கும் காலம்)அரங்கேறத் தவறுவதில்லை. மாறாக

    முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நத்தைகள் மாதிரி உள்ளே இருந்து விடுகிறீர்கள்! ஆமைகள் போல் தலைகளை உள்ளே எடுத்துக் கொள்கிறீர்கள்

    நீங்கள் மட்டும்தான் உழைக்க வேண்டுமா? தாடி நரைத்தும் இன்னும் பண ஆசை நரைக்கவில்லையே!

    ஹஜ் உம்ராஹ் போன்ற புனித கடமைகளை - முகவர்களும், நீங்களும் உங்கள் குடும்பங்களும், உங்கள் சக பங்காளிகள், எல்லோரும் வியாபாரமாக்கி, அவற்றின் சங்கைகளைக் குறைத்து, "ஷெயா மார்க்கெட்" பொருட்களாக்கி விட்டீர்கள்!

    பாவம், யாத்திரிகள். இவைகள் அத்தனையும் மிகத் தெளிவாக அறிந்ததால், அல்லாஹ் விடத்தில் இந்த ஒழுங்கீனங்களையும், சம்மந்தப் பட்டவர்களையும் ஒப்படைத்து விட்டு. புனித யாத்திரையை தொடர்கிறார்கள்!

    முஸ்லிம் தலைவர்கள் என்ற போர்வையில் உள்ள உங்களைப் போன்றோர் கண்களை அல்லாஹ்'தஆலா திறந்து வைக்கட்டும்.

    ReplyDelete
  3. Why 25000/= ? Is it refundable deposit?

    ReplyDelete
  4. Ippadiyaana Haj kadamai illai (maanam ketta sambaadippu $$$$$$$. ?????????! Haraam).

    ReplyDelete

Powered by Blogger.