Header Ads



24 மணித்தியாலங்களில் 233 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி


(NF) கடந்த 24 மணித்தியாலங்களில் திடீர் விபத்துக்களுக்கு இலக்கான 233 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 4 வீத அதிகரிப்பு என திடீர் விபத்துக்கள் பிரிவின் தேசிய பயிற்றுவிப்பு அதிகாரி புஷ்பா சொய்ஸா கூறியுள்ளார்.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திடீர் விபத்துக்களுக்கு உள்ளாகிய 106 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்கசை பெற்றுள்ளதுடன், 126 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மது போதையில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது காயமடைந்த ஒன்பது பேரும் வீதி விபத்துக்களின்போது காயமடைந்த 45 பேரும் வீடுகளில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது காயமடைந்த 40 பேரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹரகம மற்றும் தலங்கம ஆகிய பிரதேசங்களில் பட்டாசு கொளுத்தும் போது ஏற்பட்ட அனர்த்தங்களில் 16 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


No comments

Powered by Blogger.