ஈராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு துக்குத் தண்டனை
குற்றங்கள் தொடர்பாக இராக்கில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 21 பேர் தூக்கிலிடப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 21 பேரும் இராக் நாட்டைச் சேர்ந்தவர்கள். அங்கு இந்த ஆண்டில் இதுவரை 50 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச அளவில் கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் இராக் சட்ட அமைச்சர் ஹாசன் அல் ஷம்மரி மரண தண்டனை தொடரும் என்று அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பாக ஐ.நா., பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
Post a Comment