Header Ads



11 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் இஸ்லாத்திற்கு வர காரணமாக இருந்தவர்..!

Ifthihar (islahi)

11 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் இஸ்லாத்தில் நுழைய காரணமாக அமைந்த இஸ்லாமிய அழைப்பாளர் இவர். குவைத் நாட்டில் 1947 இல் பிறந்தார். ஒரு மருத்துவரான இவர் பக்தாத் பல்கலைக்கழகதில் தனது மருத்துவ பட்டத்தை பெற்றுக்கொண்டார்.பின்னர் பிரித்தானியாவிளும்,கனடாவிலும் கற்று மருத்துவ துறையில் (Gastroenterology) சிறப்பு தேர்ச்சி பெற்றார்.

ஆபிரிக்க ஏழைகளுக்கு மத்தியில் அவர்களின் சுக துக்கங்களை பகிர்த்து கொண்டவராக வாழ்வதை தன் இலட்சியமாக வகுத்துக்கொண்டார். எனவே தனது தாய்நாட்டுக்கு இடைக்கிடை தேவைகளுக்கு மட்டும் சென்று வந்தார்.

ஆபிரிக்காவில் நிரம்பி வழியும் ஆயுத குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பினார். அதேபோல் ஆபிரிக்க கண்டத்தில் பரவிகாணப்படும் பல கொடிய நோய்களுக்கும் உட்பட்டார். எனினும் அவரது “தஹ்வா” இலட்சியத்தில் அசையாத மாமலை போன்றிருந்தர்.

நவீன கலாலப்பிரிவில் இஸ்லாமிய தஹ்வா செயன்முறையை மிக சரியாக நடை முறைபடுத்திய முக்கிய அழைப்பாளராக இவர் கருதப்படுகிறார்.

அவர் தஹ்வா  துறையில் நீண்ட காலம் உழைத்த பின்னர் சிலர் அவரை ஓய்வுபெற கோரிய போது : “ உங்களால் சுவனத்தை எனக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா ? முடியாதே. எனவே நான் மரணிக்கும் வரை ஓய்வெடுக்க முடியாது” என்றார்.

தனது சுகபோக வாழ்வை தூக்கி எறிந்துவிட்டு ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட ஒரு மனிதரின் வரலாறே இவரின் வரலாறு. 

இவரது வரலாற்றில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும்,இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமிய நிறுவனங்களுக்கும் நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.

3 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    இது தான் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகனின் பண்பாகும் .
    இவ்வாறு சொந்தப்பணத்தில் இஸ்லாமியப்பிரச்சாரம் செய்யும்போது அதன்
    தாக்கம் மிகவும் பாரியதாக காணப்படும் .நமது நாட்டில் இவ்வாறானவர்கள்
    இருக்கிறார்களா ?

    ReplyDelete
  2. எமது நாட்டிலும் நிறைய பேர் தமது சொந்த பணத்தில் தக்ஹ்வா செய்கிறார்கள். அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்றது போல் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர் உண்மையில் ஒரு பெரிய தாயி. இவரிடம் நிறைய படிப்பினை இருக்கிறது. அல்லாஹ் இவருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தை கொடுப்பானாக ... ஆமின் ...

    ReplyDelete
  3. சமூகப் பணிகளுக்கூடாக தஃவாப் பணி செய்கின்ற இந்த தாயியின் முன்மாதிரியை எமது நாட்டு தஃவா தாயிகளும் பின்பற்ற வேன்டும். வெறுமனே வணக்க வழிபாடுகளைமட்டும் தஃவா என்று தூக்கிப் பிடிப்பதும் இயக்க வெறித்தனத்துடன் தஃவா செய்வதும் இஸ்லாம் ஒரு புறம் இருக்க இயக்கத்தின் பால் அழைப்பதும் தஃவாவே அல்ல என்கின்ற தெளிவினை இலங்னை தஃவா களம் புரிய வேன்டும். அப்போதுதான் மாற்றங்கள் நிகழ முடியும். இல்லையேல் வார்த்தையாகத்தான் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.