Header Ads



'சவூதி அரேபியாவின் புதிய தொழிலாளர் சட்டம் உண்மையான ஊழியர்களை பாதிக்காது'


சவூதி அரேபிய அரசு நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பு இன்மையை குறைப்பதற்கு தொழிலாளர்களுக்கான 'நிதாகத்' என்ற புதிய சட்டத்தை கொண்டுவந்து இருக்கிறது. அதன்படி 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு சவூதியர் வீதம் இங்குள்ள கம்பெனிகள் பணியில் அமர்த்தவேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

இந்நிலையில் பிரதமருடன் ஜெர்மனி சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஜித் சவூதியின் புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

சவூதி அரேபியாவின் இந்த 'நிதாகத்' என்ற புதிய சட்டத்தால், சட்டவிரோதமாக அங்கு வேலை பார்க்க செல்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி சட்டவிரோதமாக செல்லுபவர்களை மட்டுமே இது பாதிக்கும்.

ஆனால், முறையான ஆவணத்துடன் செல்லும் எந்த ஒரு உண்மையான ஊழியர்களையும் இந்த சட்டம் பாதிக்காது. இந்திய தொழிலாளர்கள் சவூதி அரேபிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றனர். இதை சவூதியும் அங்கீகரித்துள்ளது.

சட்ட விரோதமாக அங்கு பணிபுரிந்தவர்களை வெளியேற்றுவது முறையான ஆவணத்துடன் செல்லும் ஊழியர்களுக்கு புதிய பாதையை திறந்துவிட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.