'என்னை காப்பாற்றிய இரத்தம்' Vs 'தம்பியா, ஹம்பயா
(MHM Niswer)
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். (2:155) இது இன்றைய நமது இக்கட்டான சூழ்நிலைக்கு பொருந்தக்கூடிய குர் ஆன் வசனம் என்றால் அது மிகை அல்ல.
அல்லாஹ்வே நாம் உங்களுக்கு சோதனைகளை கொடுப்போம் என்று சொல்லும் பொழுது நம்மால் எவ்வாறு அல்லாஹ்வின் சோதனைகளில் இருந்து தப்பிக்க முடியும்? நபி மார்கள் உட்பட எல்லோரும் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உட்படுபவர்களே.
அனால் ஒவ்வொரு வகையான சோதனைகளையும் எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தான் இங்கு மிக முக்கிய சிந்தனைக்கு உட்படுத்த வேண்டிய விடயமாக கருத வேண்டி இருக்கின்றது.
இங்கு தான் பல சிக்கல்களும் இருக்கின்றன. அவை அரசியல் ரீதியிலா இல்லை ஜனநாயக ரீதியிலா என்பதாகும்.
அதற்கு முன் இந்த நாட்டில் நமது இப்போதைய இயலுமை எவ்வளவு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும். அடுத்த நிமிடம் நமக்கு எதிராக என்ன அட்டுழியம் அரங்கேரப் போகின்றது என்று கூட ஊகிக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு இருப்பது ஒரு வேதனைக்குரிய விடயமே.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும் தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (2:153)
இது புனிதம் மிக்க குர் ஆன் வசனம்
அனால் எம் பொறுமையை பார்த்து இவர்கள் பலவீனர்கள் என்று சொல்லுமளவுக்கு வைக்க கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துவதும் இப்போதைய காலத்தின் கட்டாயமாகும். ஏன் என்றால், அதே புனித குர் ஆன் இன்னொன்றையும் சொல்கிறது.
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்ல. (2:190)
நமது முன்னோர்கள் மௌனிகளாக இருந்து விட்டதால் தான் இன்னோரன்ன இஸ்லாமிய விழுமியங்களை இழக்க நேர்ந்தது என்ற நம் சந்ததிகளின் பழி நம்மீது வர இடம் வைக்கக் கூடாது.
பேய் ஓனான் தலை ஆட்டுவது போல் இலங்கையில் எந்த பள்ளியும் தாக்கதலுக்கு உள்ளாக்க பட வில்லை என்ற சிங்கள அமைச்சரின் பேச்சுக்கு தலை ஆட்டிய நமது முஸ்லிம் அரசியல் வாதிகளை நாம் இன்னுமா எதிர் பார்த்துக் கொண்டிருப்பது.
அவர்களால் என்னதான் செய்ய முடியும். பாவம் அவர்கள் எப்போது அவர்கள் அரச ஆசனத்தில் அமர்ந்தர்களோ அப்போதே அவர்களின் வாய்களுக்கு பிளாஸ்டர்களை போட்டு விட்டார்கள். மீண்டும் தேர்தல் வரும் போது நம் தேவைகளை அறிந்து சேவை செய்ய ஓடோடி வரும்போது நாங்களும் அனைத்து பற்களையும் காட்டிக்கொண்டு குடும்பத்திலுள்ள அனைத்து வாக்குகளையும் தாரை வார்த்து விடுவோம். காலம் காலமான எமது பழக்க தோசம் அல்லவா இது. எப்படி மாறும். நம்மை யாராலும் மாற்றவும் முடியாது.
"மா ரெக லே - என்னை காப்பாற்றிய இரத்தம்" என்று நம்மை புகழ் பெற அழைத்த அதே வாயாலையே "தம்பியா, ஹம்பயா" என்று அழைகின்றர்களே, விக்கிரகங்களை உடைத்து வீச வேண்டிய நாமே அவர்கள் பன்சலைகளை துப்பரவு செய்த பின்னும் பள்ளிவச்சல்களுக்கு தாக்குதல் நடத்துகிறார்களே, இதை இன்னுமா பொறுமையாக பார்த்துகொண்டிருக்க வேண்டும்?
இந்த மௌனத்தின் பெயர் தான் என்ன?
புலித்தோல் போர்த்திய மான் போல் இயலாமைக்கு இன்னும் எத்தனை நாள் தான் நாங்கள் பொறுமை என்று அர்த்தம் கொடுக்கப் போகின்றோமோ தெரியவில்லை.
313 சாஹாபக்களை மட்டும் வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் உதவியோடு ஆயிரம் ஆயிரம் காபிர்களை வெற்றி கொண்ட சாமூகம் அல்லவா நாம். உயிரையும் கூட துச்சமாக் நினைத்து அல்லாஹ்வுக்காக போர் புரிந்த சாமூகதில் இருந்து வந்தவர்கள் அல்லவா நாம்.
சிந்திக்க வழங்கிய கால வரையறை எல்லாம் முடிந்து விட்டது. களத்தில் இறங்கும் நேரம் தான் இப்போது.
வேண்டுகோள் எல்லாம் போர் புரிவதோ அல்லது எதிர்த்து போராடுவதோ அல்ல. அமைதியான முறையில் எமக்கு இருக்கின்ற உரிமைகள ஓங்கிய குரலில் முழு இலங்கைக்கும் கேட்கின்ற தொனியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதே. எம் தனிப்பட்ட உரிமை உட்பட மார்க்கம் சம்மந்தப்பட்ட உரிமைகளில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்பதை ஒழுங்கு படுத்தப்பட்ட, கட்டுக்கோப்புடனான ஜனநாயக முறையில் செயல் படுத்துவது நமது இப்போதைய பர்ளு கிபாயா.
இதை உணர்ந்து செயல் பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக! ஆமீன்..
Mr.Niswer, Masha Allah.. Allah Akbar.. Thank you so much... எனது மனசுக்குள்ள ஓடிக்கொண்டிருந்த விடயங்களை மிகவும் இரத்தின சுருக்கமாகவும் யதார்த்தத்தையும் எழுதியுள்ளீர்கள்... நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்... முஸ்லிம் மக்களே தயவு செய்து சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
ReplyDeleteternational For 13/11
ReplyDeleteeach one are successive [angels] before and behind him who protect him by the decree of Allah . Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. And when Allah intends for a people ill, there is no repelling it. And there is not for them besides Him any patron.
காலத்துக்கேற்ற கட்டுரை. ஆமீன்
ReplyDeletewell said, but in the end of the article again you fear them more than your fear Allah swt.. until unless we fear only Allah swt we'll never win....
ReplyDeletetime to sacrifice our LIFE, wealth & time....
without sacrifice anything don't expect victory from Allah
its truth. good thoughts. allmighty allah blessing you
ReplyDeleteநிறைவான கட்டுரை..... வெறுமனே ஊடாக அறிக்கை மட்டும் போதுமானதாக இல்லை. எம்மிடம் சம கால பிரச்சினைகளை பகுத்து ஆயும் திறன் அதிகரிக்க வேண்டும், வரலாற்றில் இது போன்ற சிக்கல்கள் இல்லாமல் இல்லை, அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஏராளமான சமூக முகாமைத்துவ தீர்வுகள் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ப எமது எதிரான செயல் / நடவடிக்கை ( counter action) திட்டமிட வேண்டும். இது அனைத்தும் எமது சமூகம் சார்ந்த தலயாய பணிகள், முன்வருவார்களா எமது துறை சார் கல்வி சமூகமும்,சிவில் கட்டமைப்பும்.......இது நமக்காண பணி அல்ல, நாம் விட்டுப் போகும் எமது பிள்ளைகளுக்கான பணி....
ReplyDeleteமிக நேர்த்தியான கட்டுரை. சொல்ல போனால் உலகெங்கிலும் இருக்க கூடிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளையும் ஒரு இஸ்லாமிய தலைமைத்துவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை இப்போது இல்லாத போது நாமாகவே நமது நிலைபாடுகளையும், உரிமைகளும் உலகிற்கு ஓங்கி உரத்து சொல்ல கடமை பட்டுள்ளோம்.
ReplyDeleteஇலங்கையின் நிலைகளை மிக உன்னிப்பாக நமது முஸ்லிம் உலகம் கவனித்து வருகிறது. நேற்று மியான்மர், இன்று இலங்கை என பட்டியல் நீளுகிறது. முஸ்லிம்கள் பொறுமை காப்பதினால் அவர்களை இன்னும் சீண்டி துன்புருத்திடலாம் என புத்த துறவிகள் நினைப்பது தவறு. இந்த நேரம் வரை புத்தர் மேல் உள்ள மதிப்பினால் அவரை பின்பற்றுபவர்களையும் உயர்வாகவே எண்ணுகிறோம். அரசாங்கம் தனது கடமையை செய்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றோம். நம்மை பாதுகாக்க வல்ல ரஹ்மான் போதுமானவன்.
முஸ்லிம்களை சிங்களவர்கள் 'மறக்களயா' என்று அழைப்பது நமக்கு ஆனந்தத்தை ஏற்படுத்த மாட்டாது மாறாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. உண்மையில் மா ரெக லே (என்னை காத்த இரத்தம்) என நம்மை அழைத்தாள் நமக்கு கௌரவமாக அல்லவாஇருக்க வேண்டும். மாற்றமாக மறக்களயா என்ற சொற்பிறயோகம் நம்மை கிண்டலடிப்பதற்கு அல்லவா பாவிக்கப்படுகிறது. ஆக மறக்களயா என்பது கீழ்வரும் ஏதோ ஒன்றுக்காகத்தான் சொல்லபட்டுல்லதாக கருத வேண்டியுள்ளது.
ReplyDelete1) மரக்களம் மூலமாக கள்ளத்தோனி யாக இங்கு வந்தவர்கள்.
2) மொரொக்கோ நாடிலிருந்து இங்கு வது கொடியேரியவர்கள்.
அடுத்தது அரசோடு ஒட்டியுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், MP க்கள் வாய் மூடி ஆமா சாமி போடுவது தன் ஆசனத்தின் மோகத்தால் என கூறுவதும் 100% சரி யாகாது. ஒரு முன்னை நாள் மா.ச. அமைச்சர் கூறினார் "எந்த பேரினவாத அரசும் நமக்கு மன்டையில் குட்டிக்கொண்டுதான் இருக்கும். அரசோடு ஒட்டி நின்றால் 10 குட்டை 7 குட்டாக குறைக்களாம், எதிர்த்து நின்றால் 10 குட்டு 15 குட்டாக அதிகதிக்களாம். இன்றைய காலகட்டத்தில் நம்மால் முடிந்தது 10 ஐ 7 ஆக்குவது மட்டும் தான்".