பொதுபல சேனாவை எதிர்கின்றேன் - கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க
இன ஒற்றுமையையும் நாட்டின் பாதுகாப்பினையும் பொது பல சேனா சீர்குழைக்கிறது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க குறிப்பிட்டார். கல்முனைக்குடி கடற்கரை அல்மிஸ்பா விளையாட்டுத்திடலில் நடைபெற்ற வலைபந்தாட்ட விளையாட்டுப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கான பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்காண்டவாறு குறிப்பிட்டார்.
இது ஒரு சமாதாணத்துக்கான போட்டியாக இருக்கின்றதை என்னால் கானக் கூடியதாக இருக்கின்றது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இப்படியான விளையாட்டினை மூன்று இனங்களும் சேர்ந்து நடாத்தக் கூடியதாக இருந்ததா? ஐந்து வருடங்களுக்கு முன்னர் எமது கைகளில் பந்து இருப்பதற்கு பதிலாக குண்டுதான் இருந்தது. பந்து இருந்ததா? இல்லை. ஆனால் இப்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக விளையாடிக் கொண்டிருக்கின்றோம். இது தான் எமது வெற்றி.
இன்று எம்மை குழப்புகின்ற பொதுபல சேனா பேன்ற அமைப்புக்களை நான் கூட எதிர்கின்றேன். எனென்றால் நமது ஒற்றுமை மற்றும் பாதுகாப்புகளினை அவர்கள் சீர்குழைத்துக் கொண்டு செல்கின்றார்கள். ஹலால் என்ற விடயத்தின் போது நான் மிகவும் கவலையடைகின்றேன். அது முஸ்லீம்களிக் உரிமை. அவர்களின் ஆத்மீக விடயம் என்பது எனக்கு தெரியும். நான் ஒரு சிங்களவனாக இருக்கின்றேன். ஆனால் நான் ஒவ்வெருவரையும் மனிதனாகத்தான் பார்க்கின்றேன். நான் சிங்களம் நான் தமிழ் நான் முஸ்லிம் எனப் பிரித்து பார்ப்தில்லை. நான் மனிதனுடன் நன்றாக இருக்கின்ற போது இறைவன் என்னுடன் இருப்பான் என்பது தான் எனது எண்ணம்.
எனவே நான் இந்த மிஸ்பா விளையாட்டு கழகத்துக்கான விளையாட்டு மைதாணம் ஒன்றினை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை எதிர் காலத்தில் உங்கள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனுடன்; சேர்ந்து செய்வேன் எனக் கூறிக் கொள்கின்றேன். அதற்கான அனைத்து விதமான தகவல்களினையும் என்னிடம் வழங்குமாறு உறுப்பினர் அவர்களை வேண்டிக் கொள்கின்றேன். இவ்வைபவத்தில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினா சட்டத்தரணி ஆரிப்சம்சுடீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment