ஹலால் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த பாதுகாப்பு அமைச்சு அழைப்பு விடுத்தது
பாதுகாப்பு அமைச்சின் அழைப்புக்கு அமையவே ஹலால் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக பேராசிரியர் பெல்லானவில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வமத நாற்கலிகளுக்கு ஆசை கொண்ட முதுகெலும்பு உடைந்த பிக்குகள் சிலர், உலமாக்களுடன் இணைந்து மகாநாயக்க தேரர்களை ஏமாற்றி, ஹலால் தொடர்பான ஏமாற்றுவித்து சம்பந்தப்பட்டு கொண்டதாக பொறுப்புடன் கூறிகொள்வதாகவும் உலமாக்களுக்கு ஆதரவு வழங்கும் பிக்குமாரை வன்மையாக கண்டிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே விமலரத்ன தேரர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா வெளியிடும் கருத்துக்கள் தொடர்பான பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர்கள் விரும்பியதை தெரிவிக்க இடமளிக்குமாறும், ஊடகங்கள் மூலம் பல்வேறு கருத்துக்களை வெளியிடும் பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைவர், “நாரே தக்பீர் இஸ்பஷலிஸ்ட்”, றஊப் ஹகீம் இருக்கும் வரைக்கும் உங்கள் காட்டில் மழை! நாங்கள் எல்லாம் சிலை!
ReplyDeleteஎம் தலைவருக்கு “ஆதவன் எழுந்து வருவது” தேர்தல் காலத்தில் மட்டும்தான். தேர்தல் முடிந்ததும் தூங்கும் ஆதவன் மீண்டும் மறு தேர்தலுக்கு “ஆதவன் எழுந்து வந்தான்!! .... என்ற பாட்டுடன் வெளிவருவான்.. ஆதவன் வாகெடுப்பான், கிழக்கு வழி மறப்பான்.
தலைவரே! போடுங்கள் நமது குடும்பப் பாட்டை! (பழைய படத்தில் வரும் காட்சிபோல்) ஆதவன் எழுந்து வந்தான்!!, குமுற வையுங்கள் நம் தோழர்களை “நாரே தக்பீர்”!!!!!!!!