ஹலாலை ஹராமாக்குதல்..!
(ஞாயிற்றுக்கிழமை, 3 ஆம் திகதி சிங்கள வாரப்பத்திரிகையில் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்திநெத்தி எழுதியுள்ள கட்டுரையே இது)
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக மொழிமாற்றம் செய்தவர் புனான் மொஹமட்)
இப்பொழுது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பார்ப்பது அவற்றின் விலையையோ காலாவதி தினத்தயோ அல்ல. அவை ஹலாலா என்பதையே. ஹலால் என்றிருந்தால் ஹலால் பகிஷ்கரிப்பின் காரணமாக ஹராம் ஆகிப்போன பொருள் ஹலால் என்றால் திரும்பி கொடுத்துவிடுகிறார்கள் பிக்குகள் சிலர் இக்காலகட்டத்தில் போதிப்பது சிங்களவனுக்கு ஹலால் ஊட்டாதே என்பதையே .
சிலரின் கூற்று சிங்களவருக்கு ஹலால் கூடாதவிடயமாகும். அக்காரணத்தால் முத்திரை பதியப்பட்டவை அவர்களுக்கு ஹராமாகும். ஹலால் என்பது உகந்தது. ஹராம் என்பது உகந்ததல்ல. முஸ்லிமின் உணவு சிங்களவருக்கு உகந்ததல்ல என்பது நாமே அசலான சிங்களவன் என மார்தட்டிக்கொள்ளும் ஒரு கூட்டத்தின் ஊற்றே இது.
செட்டியார்தேருவில் கடைகளுக்கு தீவைத்தது, இந்த இனவெறியின் உச்சகட்டமே. யாழ் நூலகம் பற்றி எரியும்போது இந்த வெறியர்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். அன்றோ தமிழனின் நகைக்கடைகளும், யாழ் நுலகமும் இனவெறியர்களுக்கு ஹராமாயின. ஆதலால் அவற்றை தீக்கரையாக்கினர். இறுதியில் விதைத்த இனவாதத்தின் வினையை அறுத்தது விதைத்த சிறில் மதிவ்வோ,கோனவள சுனிலோ அல்ல.மாறாக இருபக்கத்தினதும் இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களே முப்பது வருட யுத்தத்தின் பாதிக்கப்பட்டோர் அப்பாவிகளே அன்றி அந்த நச்சு கருத்துகளை விதைத்தவர்கள் அல்ல.
இனவாதம் கணப்பொழுதில் சுவாலைவிட்டு எரியக்கூடியாதே. இப்போது தீமூட்டி சாம்பலினால் முடியுள்ளார்கள். ஒரு தீக்குச்சியின் பணியே பாக்கியுள்ளது. இலங்கை ஒரு வித்தியாசமான நாடு இங்குள்ள மக்களும் அப்படியே. அதனால்தானோ அவரவருக்கேட்பவிதத்தில் இங்குள்ள மக்களை குழப்ப முடிகிறது.விளாம்பழம் விழுந்து,விழுந்தது வானம் என்று ஒருகூட்டமெ பின்தொடர்ந்து ஓடியது என்கிற இலக்கியக்கூற்று பிரஸ்தாபிப்பது இம்மக்களையோ என என்ன தோன்றுகிறது.
லக்ஷ்மன் கதிர்காமர் பவுர்ணமி தினத்தை உலக விடுமுறை தினமாக்க முயற்சிக்கும்போது தமிழன் என புறக்கணிக்கவும் இல்லை அத்தருணத்தில் கதிர்காமர் ஹராமாக வில்லையே,அன்றோ அவர் ஹலால் நல்லவரு, வல்லவரு, விருபுக்குரியவரு.
மொஹிடீன்பெக் கொச்சை சிங்களத்தில் புத்தங் சரணங் கச்சாமி என பாடும்போது அவர் "ஹம்பயா" என்று புறக்கணிக்கவில்லை.இன்றும் பவுர்ணமியில் பன்சலையில் அவரின் பாடல்கள் முழங்குவது மொஹிதீன்பெக் முஸ்லிம் என அறியாமலோ..?
முரளிதரன்,ரசல் அர்னோல்ட்,மஹ்ரூப் இலங்கையை வெற்றி பெறசெய்தபோது நாம் அவர்களின் பிறப்பை பற்றி விசரிக்காதது அவர்கள் ஈற்றி தந்த வெற்றியின் காரணமாகவே,அன்றி அவர்கள் தோல்வி கண்டிருந்தால் அவர்களின் பிறப்பு,குளம்,கோத்திரம் எல்லாவற்றயும் தேடி அவமானபடுத்திருப்போம். அது நம் இயற்கைக்குணம்.
இன்று நாட்டிம் குற்றம்கள் மலிந்துள்ளது. அரசின் ஆசிர்வாதத்தினோடு கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன.அரசின் அனுமதிப்பத்திரத்தின் தயவாலேயே கள்ளசாராயம் காட்சப்படும் அவலநிலை. சகலமதம்களினாலும் வெறுக்கப்பட்ட செயல்கள் மலிந்தே கிடக்கின்றன. இவற்றை ஹலால் ஹராம் என வகுப்பதற்கு யாரும் இல்லை.
சிலரின் கருத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் ஹலால் ஊட்டுகிறார்கள் என்பது இல்லாவிடில் சிங்களவர்களின் வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களின் மார்க்க இயக்கம் அபகரித்து அங்கு ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படுகிறது என்பது. அதை முற்றாக நிராகரிக்க முடியாவிடினும் இந்த தொனிப்பொருளை வைத்து விவாதம் செய்தாலும் பரப்பப்படுவது இனவாதமே அன்றி வேறில்லை.
இன்று வர்த்தகம் சீர்குலைந்து இருப்பது இன மத ரீதியால் அல்ல.இலங்கையில் என்றால் இவ்வரசாங்கம் அறவிடும் வரியே காரணம். மக்களால் சுமக்க முடியாத வாழ்க்கைச்செலவு. இது இன மத ரீதியாக வேறுபடாது. சுரண்டுபவனுக்கு யாரென்றாலும் சரியே. அரசாங்கம் மக்களிடம் வரி அரவிடும்போது ஹலால் ஹராம் பார்ப்பது இல்லை.
சென்றவாரம் எரிபொருள் விலை ஏற்றப்பட்டது. அவ்விலையேற்றத்திற்கு ஏற்ப சிங்கள தமிழ் முஸ்லிம் என வேறுபாடு இல்லை. ஹலால் ஹராம் எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.இறுதியில் மாதாந்த ஊதியம் பெறுவோர் கூலிதொழில் செய்வோர் ,வேலையற்றோர் அனைவரும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர்களே.
சிங்கள குழந்தை தேங்காய் திருட சென்றது முஸ்லிம்கள் தமக்கெதிராக வர்த்தகம் செய்வதாலோ,ரிசானா மத்தியகிழக்கு சென்ற மரணித்தது சிங்களவர்கள் இங்கு தொழில் செய்ய விடமையினலோ அல்ல. சிங்கள முஸ்லிம் நாம் அனைவரும் எதிர்த்து போராடவேண்டியது நமக்குள் அல்ல,எம்மனைவறையும் துன்புறுத்தும் நம் பொது எதிரிக்கு எதிராகவே.முதலாளித்துவமும் முதலாளித்துவத்தை இலங்கையில் செயல்படுத்தும் அரசாங்கத்திக்கு இது நல்ல சந்தர்ப்பமாகும். இங்கு மக்கள் தமக்கிடையே சச்சரவு பண்ணிக்கொல்வதின் இலாபம் அவர்களுக்கே சென்றடயும்.
இப்போது அனைவரும் ஹலால் ஹராமில் தெளிவற்று காணப்படுகின்றனர்.பொருட்களின் எரிபொருள் விலையேற்றியது அரசாங்கமே. எரிபொருள் கூட்டுத்தாபனத்தை நஷ்டமடைய செய்தது அரசாங்கமே அன்றி பொதுமக்கள் அல்ல.இப்போ மக்ககளுக்கு விலையேற் ஹராமாகும். இது ஹலால் ஆவது அரசாங்கத்திக்கு மட்டுமே. இனிமேல் நாம் இவைகளை பிரிக்க வேண்டியது இவ்வாறே.
அரசதொழில் வாய்ப்புகள் நன்றாகப்படித்த பொதுமக்களின் குழந்தைகளுக்கு எட்டக்கணியாகும். அரசியல்வாதிகளுக்கும் அவர்களை சார்ந்தோருக்கும் என்று உறுதிசெய்யப்பட்டு விட்டன. தகுதிக்கேற்ப தொழில் கொடு என்று கோஷமிடவேண்டியது சிங்கள முஸ்லிம் தமிழ் அனைவரும் ஒன்றிணைந்தே. இலங்கையில் சகல குழந்தைகளுக்கும் அரச தொழில் ஹராமாகும். அரசியல்வாதிகளும் அவர்களை சார்ந்தோரையும் தவிர.
ஆதலால் இன்று நேர்மையாக வாழ்வோருக்கு அப்படி வாழும் சுதந்திரம் ஹராம் ஆகும். சுதந்திரம் அவசியமானதே. எனவே ஜனநாயகத்தை,சுதந்திரத்தை நாமனைவருக்கும் ஹலாக்கி கொடு என போராடவேண்டிய தருணமே இது.இப்போது மக்களை கொள்ளும் சுதந்திரத்தய்யும் அரசாங்கம் மட்டும் பெற்றுள்ளது.
முஸ்லிமின் ஹலாலை ஹரமாகுவதனுடாக சிங்கள தமிழ் மக்களுக்கோ, தமிழனின் சொத்தை அபகரிப்பதநாள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கோ,சிங்களவனுக்கு சொந்தமானதை அபகரிப்பதால் முஸ்லிம் தமிழ் மக்களுக்கோ எந்தவிதமான நன்மையும் ஏற்படபோவதில்லை. காரணம் இன்றைய முதலாளித்துவம் நம் அனைவரையும் விற்பனைக்கு வைத்துள்ளது. எம்மை மட்டும் அன்றி எமது சமய சிந்தனைகளையும் விற்றுவிட்டது. நாம் அனைவரும் விடுபடவேண்டியது அந்த பொது எதிரியிடம் இருந்தேயாகும்...!!
to be understood in public. good thinks. that is truth.
ReplyDeleteஇவர் அவருடைய அரசியலுக்காக பேசினாலும் உண்மைகளை எடுத்து வைக்கிறார், ஆகவே இவர் போன்று கதைப்பவர்களின் கருத்துக்களை உள்நாட்டில் பிரபலப்படுத்தும் அதே நேரம் இன்றைய எமக்கான எதிர் நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதும் எமது கடமையாக எடுத்துக்கொள்ளல் வேண்டும்.,யாருக்கு வாய்ப்புகள் இருக்கிறதோ அவர்கள் கட்டாயமாக செய்தே ஆகவேண்டும்.
ReplyDeleteVery good article. We must get the people to know it and you must go to BoduBalaSena and place these matters and explain their ways totally wrong
ReplyDeleteநிச்சயமாக உண்மை ஒருபோதும் மரணிக்காது.
ReplyDeleteஹலால் ஹறாம் பற்றி தற்கால நிதர்சன உலகோடு ஒப்பிட்டு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள். மொழிமாற்றித் தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இஸ்லாமிய அமைச்சர்மார்களே நீங்கள் எந்த மதத்தில் இருக்கிறீர்கள் என்றாவது எங்களுக்குக் கொஞ்சம் சொல்வீர்களா?
உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.... மிக்க நன்றி
ReplyDelete