Header Ads



ஜனாதிபதிக்கு அதிகமாக அத்தர் பூசுகிறார்கள் - சூடுபட்ட முபாரக் மௌலவி சொல்கிறார்


 மத்தல விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு மதவாதம் மட்டுமல்ல சமயத்தலைவர்களின் அதிகப்படியான காக்காய் பிடிக்கும் குனமுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்தள விமான நிலைய திறப்பு விழாவில் பௌத்த மதம் தவிர ஏனைய சமய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக வந்த செய்தியில் ஹசன் மௌலானா, ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகார ஆலோசகர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையை அறிந்திருக்கும் நாம் அதனை கூறாமல் விடுவது தவறான செய்தியை நாமும் ஆதரிப்பதாக ஆகி விடும் என்பதற்காக இதனை சொல்ல வேண்டியுள்ளது.  

ஹசன் மௌலானா நல்ல நண்பர். அவர் பற்றிய செய்தி தவறாக ஊடகங்களில் வெளிவருவதை தடுக்க வேண்டுமென்பதற்காகவே இதனை சொல்கிறோமே தவிர எந்த காழ்ப்புணர்வும் இல்லை. உண்மையில் ஹசன் மௌலானா ஒரு மௌலவியாக இல்லாத போதும் ஜனாதிபதியின் ' முஸ்லிம் விவகார இணை இணைப்பாளராக' நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே சரியான தகவலாகும். இதனை ஊடகவியலாளர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதே பதவியிலேயே மறைந்த நியாஸ் மௌலவியும் கடமை புரிந்தார். அவரையும் ஆலாசகர் என்றே ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன. 

      2005ம் ஆண்டு எமது உலமா கட்சியினதும் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல் சமயத்தலைவர்களையும் தனது நிகழ்வுகளில் இடம்பெற வைக்கும் நல்ல தன்மையை கடைப்பிடித்தார். அதன் போது நானே அதில் முதலாவதாக கலந்து கொள்ளக்கூடியவனாக இருந்தேன். அதன் பின் 2007ம் ஆண்டு முதல் சகோதரர் நியாஸ் மௌலவி ஜனாதிபதிக்கு ஆதரவாக மாறியதிலிருந்து அவருக்கும் சிறந்த இடம் வழங்கப்பட்டது. எமக்கொரு பதவி வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கேட்காததன் காரணமாக நியாஸ் மௌலவிக்கு ஜனாதிபதியின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும் - சில வேளைகளில் ஓவராக இருந்தாலும்- மிக அழகிய முறையில் தனது பதவிக்குரிய கௌரவத்தை காப்பாற்றினார். அவரோடு இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்றக்கிடைத்தது சிறப்பாக இருந்ததோடு அவர் இல்லாத குறை இன்று பெரிதாகவே தெரிகிறது. 

     2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்பு ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகள் வேறு பட தொடங்கின. ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு புதிதாக ஒட்டியவர்களின் ஆக்கிரமிப்பும், பௌத்த மதத்துக்கு மாத்திரம் அதிக இடம் கொடுக்கும் செயற்பாடுகளையும் காண முடிந்தது.  நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்வதையே விரும்பினேன். அதனால் இது பற்றி; அலட்டிக்கொள்ளவில்லை. 

     இப்போது மத்தள விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமய தலைவர்கள் ஒதுக்கப்பட்டமை இவற்றின் தொடரான சங்கதியாகும். ஆனாலும் இங்கு ஒரு விடயத்தை நான் அவசியம் தொட்டுக்காட்டத்தான் வேண்டும். ஜனாதிபதி கலந்து கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பௌத்த தேரர்கள் மிக அமைதியாக தமது சமய அனுஷ்டானங்களை மட்டும் செய்வார்கள். அத்துடன் போய்விடுவார்கள். ஆனால் ஏனைய சமயத்தலைவர்களோ (கிறிஸ்தவ இணைப்பாளர் சரத் ஹெட்டி ஆராச்சி தவிர)  மற்றவர்கள் அந்த இடத்திலும் பொன்னாடை, அத்தர், தேவைக்கதிக சத்தம், ஊடகங்களுக்கு காட்ட வேண்டுமென்றே அலட்டிக்கொள்வது போன்ற விடயங்கள் பலராலும் மோசமாக குசு குசுக்கப்பட்டதை அறிவேன்.  

தம்புள்ள சம்பவத்துடன் நாம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்கத்திலிருந்து தூர மாகிவிட்டாலும் இனவாதிகள் கை ஓங்கி ஏனைய சமயங்கள் ஒதுககப்படும் நிலை வருமென இறைவன் எமக்கு அறிவித்தன். அந்த வகையில் மத்தளவில் ஏனைய சமய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தாலும் சமயத்தலைவர்களுக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்.  

10 comments:

  1. Pesama irukku chellunka

    ReplyDelete
  2. அம்! நீங்கள் சொல்வதும் உன்மைதான் எமத உலமாக்கள் (?) மேடைகளில் அதிகமாகப் புகழ்வதும் பொன்னாடை போத்துவதும் அத்தர் பகிர்ந்துகொள்வதும் பாரளுமண்ற உறுப்பினர்களுக்கும் பாடகர்களுக்கும் பாத்திஹாக்கள் ஓதி வாழ்த்துவதம் கைகூம்பி கும்பிடு போடுவதும்.நல்லபிள்ளையாகிக்கொள்ள மார்க்கத்தில் இல்லாத நாடகங்களை அரங்கேற்றுவதையும் அவர்களும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக்பொண்டிருப்பது?

    ReplyDelete
  3. Evarukku Vera Velai Illa



    ReplyDelete
  4. Evarukku Vera Velai Illaya

    ReplyDelete
  5. we happy if you stop to talk about Muslim if really you are the leader then talk about BBS.Don't talk about any mulsim Groups or ACJU .

    ReplyDelete
  6. இறைவன் எமக்கு அறிவித்தான் என்றால் உங்களுக்கு வஹியா வந்தது? அடுத்த முஸைலமாவாகவேண்டாம் நாளை கல்முனையில் ஆர்பாட்ட பேரணி இடம்பெற இருக்கு உங்க தலமையில் எத்தனைபேர் கல்ந்து கொள்ள இருக்கிறீர்கள்? அதற்கும் கொழும்பில் இருந்து விமர்சனம் மட்டுமா?

    ReplyDelete
  7. jaffna muslim pls dont update this mental fellows statement

    ReplyDelete
  8. hey please some body teach him Aqeedha, ha ha laughable things now he is getting wahi too..what is the meaning of this(இனவாதிகள் கை ஓங்கி ஏனைய சமயங்கள் ஒதுககப்படும் நிலை வருமென இறைவன் எமக்கு அறிவித்தன்), I think better to ask some ulama from ur area kalmunai to remind you aqeedha or better to consult a doctor may be he need a good sleep..stop posting from this guy..may be I have to stop reading juffna muslim

    ReplyDelete
  9. பாருடா... இவருக்கு இறைவன் அறிவித்தானாம்.
    இந்தக் கோமாளியின் கட்டுரைகளை வெளியிட்டு jaffna muslimin இடத்தை விரயம் செய்ய வேண்டாம். வலது பக்கத்தில் உள்ள விளம்பரப் பகுதியில் வேண்டுமென்றால் பணம் அறவிட்டு இவரின் விளம்பரத்தை வெளியிடவும்.

    இந்தாளு வேற "சீரியஸ் டைம்ல காமெடி பண்ணிக்கிட்டு."

    ReplyDelete
  10. இவருடைய வேளையே இதுதானப்பா

    ReplyDelete

Powered by Blogger.