யானைப் பறவையின் முட்டை..?
(இந்தியா திர்)
பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் வாழ்ந்த மிகப்பெரிய பறவை இனம் என கருதப்பட்டது யானைப் பறவை. சுமார் மூன்று மீட்டரை விட (10 அடி ) உயரமானதாகவும் , ஐநூறு கிலோ எடை கொண்டதுமான இந்த பறவை இனத்தை கடந்த 1640 மற்றும் 1650 ஆம் ஆண்டுகளில் மடகாஸ்கர் காடுகளில் பார்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்த பறவை இனத்தின் முட்டை சுமார் மூன்று அடி நீளம் கொண்டதாகவும், சாதாரண கோழி முட்டைகளை விட சுமார் 160 மடங்கு பெரியதாகவும் இருக்கும் . இந்த பறவை இனத்தை மனிதன் வேட்டை ஆடியதாலும் , வேறு சில காரணங்களாலும் முற்றிலும் அழிந்து போனது.
இந்த நிலையில் அழிந்து போன இந்த பறவை இனத்தின் முட்டை ஒன்று அடுத்த மாதம் லண்டனில் ஏலத்துக்கு வருகிறது. இந்த முட்டை 13- 17ஆம் நூற்றாண்டை சார்ந்தது என தெரிகிறது. எந்த சேதமும் அடையாத இது போன்ற முட்டையை காண்பது மிக அரிது. எனவே இந்த யானைப் பறவையின் மெகா சைஸ் முட்டை சுமார் 40,000 டாலர் ( இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 லட்சம் ) வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment