Header Ads



'முஸ்லிம்களாகிய நாங்கள் பதில் அடி கொடுக்க பின்வாங்கப்போவதில்லை'



(இ. அம்மார்)

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் ஹலால் பிரச்சினை இழுபறியில் இருந்து கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஹிஜாப் பிரச்சினையை பொதுபல சேன அமைப்பு தூண்டி விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பினை மன்னம்பிட்டிய பிரதேசத்தில் தபால் நிலையத்தில் சேவை புரிந்த ஒரு யுவதியின் ஹிஜாப்பை கலட்டி எறியப்பட்டிருப்பது. இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களினதும் மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முஸ்லிம் கேவலப்படுத்துகின்ற  உச்ச நிலையின் செயற்பாடாக அமைகின்றது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைக் கூட்டம் இன்று 19-03-2013 மத்திய மாகாண சபையின் பதில் தவிசாளர் டி. ஜீ. சிரிசேன தலைமையில் நடைபெற்றது. அந்த அந்நிகழ்வில் உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக உரையாற்றும் போது ரிஸ்வி பாரூக் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

முஸ்லிம்கள்  இந்நாட்டின் கலன் கருதியும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் துணைபுரிகின்ற நோக்கில் பொது பல சேனவின் பல்வேறு செயற்பாடுகளை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இதற்கு அப்பாலும் பொறுமை காக்க வேண்டுமா என்ற கேள்விக்குறி சகல தரப்பு முஸ்லிம்களிடம் எழுந்துள்ளது.

இன்று பாடசாலை மாணவிகளின் சீருடைகள் கட்டையாகிக் கொண்டிருக்கின்ற வேளையில் இந்நாள் முன்னொரு சபைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு 'நவாஸ்சாரி' என்கின்ற மாணவர்கள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் அணிகின்ற சீருடையை பாடசாலை சீருடையாக மாற்றுவதற்கு நான் பிரேரணையைக் கொண்டு வந்த நோக்கம் சிங்கள மக்களின் கலாசாரத்தை பேணுவதற்கே ஆகும். அத்துடன் இஸ்லாமிய மார்க்கப்படி பொருத்தமான உடை அணியும் பெண்களை கேவலப்படுத்துவதை விட இன்று கொழும்பு பிரதேசங்களில் உள்ளாடைகளை ஒத்த அரைகுறை ஆடைகளுடன் உலாவித் திரியும் பெண்களைத் திருத்துவதைவிடுத்து இவ்வாறான கேவலமான செயற்பாடுகளைச் செய்வது ஏன் என்ற கேள்விக் குறியாகவே உள்ளது.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் முஸ்லிம்களாகிய நாங்கள் இதற்குப் பதில் அடி கொடுப்பதற்கு பின்வாங்கப்போவதில்லை என்பதை அவர்கள் வெகு விரைவில்  உணர்ந்து கொள்வார்கள் என்பது சந்தேகம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.



5 comments:

  1. It is a right time to impose the cultural dress that of ABAYA into the Muslim School Uniform in order to facilitate our community in term of a realistic Identity of Muslim Female Gender.

    ReplyDelete
  2. ACT FAST ALL MUSLIMS AGAINST FOR THIS NONSENSE. TERMINATE THIS NONSENSE @ THE BEGINNING. FILE A CASE AGAINST TO THEM IN POLICE.

    ReplyDelete
  3. Request all the Muslim Lawyers, I dont understand why nobody has gone to court over 'Hijab' issue. We heard a parent had gone to court to get the for school students but even that been questioned it seems. Anyway we must get a court order as it is our religious right which is gurrenteed by the constitution of the country and cannot be question by anyone.

    ReplyDelete
  4. ஆமா எப்ப திருந்தினீர்கள் மாகாண சபை உறுப்பினரே! இதுவும் அ.....காகவா?

    ReplyDelete
  5. எனது அன்பிட்கினிய நண்பனே , அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக.பிரஅவனின் வீட்டில் வளர்ந்த மூசாவாக உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
    அக்குரணை பிரதேச முஸ்லிம் கடைகளை உடைக்க எங்களின் ........? அரசியல் தலைவர் ஒருவர் கட்டளை பிறப்பித்த போது நாங்கள் முன்னெடுத்த போராட்டம் நினைவில் வருகின்றது.
    மாஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.