சம்பிக்க ரணவக்கவும், முஸ்லிம்களின் அவலநிலையும்...!
(ஏக்கூப் பைஸல் )
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும், பொதுஜன ஜக்கிய முன்னணியின் அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க எழுதிய அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலில் இருந்து முஸ்லிம்களை இழிவுபடுத்தும் கேள்விகளுக்கு, முஸ்லிம்களின் தீர்க்கமான விடைகள்.
கேள்வி:- அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதியுள்ள அல்கைதா அல் ஜிஹாத் பற்றி நீங்கள் அறிந்த விடயத்தினை கூறமுடியுமா ?
பதில் :- முதலில் சம்பிக்க ரணவக்க கல்வியில் பின்தங்கியிருக்கின்றார் என்பதையும், ஒரு இனத்தை தூசித்திருப்பதன் மூலம் அவர் புத்த மதச் செயற்பாட்டினை எதிர்க்கின்றார் என்பதனையும். ஒரு வியாபாரியால் சிறந்த புத்தகங்களை எழுத முடியாது என்பதனையும் , மற்றும் சம்பிக்க திறைப்படங்களுக்கு கற்பனை கதை எழுத ஒரளவு பொருத்தமானவர் என்பதனையும், நாட்டின் மக்கள் பிரதி நிதியான ஒருவர் சிறுபான்மை இனத்தினை தூசிப்பதன் மூலம் அமைச்சுப் பதவிகளுக்கோ, அல்லது பாராளமன்ற உறுப்பினர்க்கோ பொருத்தமற்றவர் என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
கேள்வி :- இலங்கை 2090 ஆம் ஆண்டு முஸ்லிம் நாடாக மாறும் என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் இததை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?
பதில்:- இலங்கையில் வாழுகின்ற அதிக பெரும்பான்மை மக்களை கொள்கை ரீதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் சிங்கள ராவய , பொது பல சேனா மற்றும் பல அமைப்புக்கள் ஒன்றுபட்டு சிங்கள மக்களுக்கிடையிலும்;, பௌத்த மதக் கொள்கைகளுக்கிடையிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றார்கள்;. இவ்வாறு இந் நிலை தொடந்து கொண்டு போனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் பல முரண்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் போட்டியிட்டுவர்கள்.இதன் காரணமாக ஒவ்வொரு குழுவினுடைய தலைவர்களும் ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிப்பார்கள்;. அப்போது பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் ஒவ்வொரு குழுவுவின் தலைவர்களுக்கும் பிரிந்து வாக்குகளின் எண்ணிக்கை குறையும். இதன்போது சிறுபான்மை முஸ்லிம்களில்; இருந்து ஜனாதிபதியாக போட்டியிடுகின்ற ஒருவருக்கு தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வாக்களிப்பார்கள் அப்போது அதிக பெரும்பான்மை. வாக்குகளைப்; பெற்ற முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வரலாம். இந்த நிலையினை உருவாக்குவதற்கு சம்பிக்க ரணவக்கவுக்கும், அவருடைய சிங்கள அமைப்புகளுக்கும் எடுக்கும் காலத்தின் கடைசி ஆண்டு 2090 ஆகும். இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறும் என்று சம்;பிக்க ரணவக்க பகுத்தறிவு இல்லாமல் ஜோதிடம் பார்த்து கூறுவது போல சிங்கள மக்களிடம் கூறி இனப் பிரச்சினையினைக்கு தூண்டுகின்றார்.
கேள்வி :- அமைச்சர் சம்பிக்க ரணவக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம்களின் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்கின்றர் இது உண்மையா ?
பதில்;:- ஆம் , இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ற பதத்திற்கு பொருள் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றல் ஆகும். அல்குர் ஆன் . அல் ஹதிஸ் என்பனவற்றுக்கு அமைவாக வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்கின்றார்கள்;. அமைச்சர் சம்பிக்க ரணவக்க பௌத்த மதத்தினையும் , புத்தரையும் முழுமையாக பின்பற்றினால் அவர் பௌத்த அடிப்படைவாதியாவர். அப்படி பின்பற்றாவிட்டால் அவர் பௌத்த அடிப்படைவாதியாக இருக்க முடியாது . சம்பிக்க ரணவக்க முஸ்லிம் மாணவர்களின் மதத்தில் உள்ள பின்பற்றளினைப் பார்த்து தென் கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளின் தொட்டில் என்கின்றார். முதலில் அடிப்படைவாதம் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு முழுமையாக விளக்கமின்மைதான் இவ்வாரான கருத்துகளுக்கு காரணம் என நினைக்கிறேன்.
கேள்வி :- தற்போது சிங்களவர்களது வளர்ச்சி வீதம் 1 ஆகவும்; முஸ்லிம்களினது வளர்ச்சி வீதம்; 2.8 ஆகவும் இருக்கிறது. சிங்கள இளைஞர்களினது விகிதாசாரம் ; 16 ஆகவும் முஸ்லிம் இளைஞர்;களது விகிதாசாரம் 29 வீதமகவும் அதிகரிக்கப்படுகிறது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவத்த கருத்து பற்றி நீங்கள் என்ன கூறுகின்றிர்கள்.
பதில் :- பாட்டாளி சம்பிக்க ரணவக்க பிறந்தது 1965.05.04 ந் திகதி தற்போது 49 வயது ஆகிறது. ஆனால் அவர் மூக்கு கண்ணாடியும் அணிந்து இருக்கிறார். இருந்தும் ஏனோ தெரியவில்லை அவர் படிக்கும் பத்திரிகைகளில்தான் தகவல்கள்; பிழையாக இருக்கிறது. அதனால் அவர் கூறும் கருத்துக்கள் நாட்டில் எல்லா விடயத்திலும் பிழையாக இருக்கிறது. அவரது முந்திய தொழில் வர்த்தகமாக இருப்பதால் அரசியலை ஒரு வர்த்தகமாக செய்கிறார் என நான் நினைக்கின்றேன்
இலங்கையில் 1981 ஆம் ஆண்டு 74 வீதமாக காணப்பட்ட சிங்களவர்கள் 2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் சிங்களவர்கள் 74.9 வீதமாகவும். 1981 ஆம் ஆண்டு 7 வீதமாக காணப்பட்ட முஸ்லிம்கள் 9.2 வீதமாகவும் காணப்படுகின்றார்கள். முஸ்லிம் மக்களின் சனத்தொகை மாற்றம் சிங்கள மக்களின் சனத்தொகையின் மாற்றத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சனப்பரம்பல் பிரிவின் பணிப்பாளர் பண்டார 2013.03.19 ஆம் திகதி தெரிவித்தார்.
கேள்வி :- அமைச்சர் சம்பிக்க ரணவக்க அல் ஜிகாத் அல் கைதா நூல் வெளியீட்டின் போது சவுதியில் இருந்து இலங்கைக்கு வந்த அரபியர்கள் 700 பேர் மத்ரஸாக்களில் கற்பித்து வருகின்றார்கள் அவர்கள்தான் அண்மையக் காலமாக நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம் எனவே அந்த அரபியர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார் இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதில் :- முதலில் சவுதியில் இருந்து வந்து கற்பிக்கும் ஒரு அரபியரை கூட நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது ஏன் ஏன்றால் அரபியர்கள் மத்ரஸாக்களில் இருந்தால்தானே வெளியேற்ற முடியும். சவுதி அரபியர்கள் இலங்கையில் வந்து தங்கி நின்று கற்பிப்பதற்கு இது மிக சிறந்த வளமுள்ள நாடு இல்லை . அமைச்சர் சம்பிக்கவுக்கு முடிந்தால் ஒரு அரபியரை இலங்கையில் இருக்கின்ற மத்தரஸாக்களில் கற்பிப்பதை காட்டட்டும்.
நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் மத்தரஸாக்களில் தங்கியிருக்கும் அரபிகள் என்று கூறும் மறைமுக கருத்து நாட்டில் பிரச்சினைக்கு மத்ரஸாக்கள் என்பதாகும். இது தவறான கருத்தாகும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் எங்களது மதம் துணைபோகவில்லை , ஆனால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பின்பற்றும் மதம் துணைபோனது என்பதனை அண்மையில் கண்ணுள்ள ஒவ்வொருவரும் கண்டுள்ளார்கள்.
நான் மேற்குறியது போல அமைச்சர் சம்பிக்க புத்தியுள்ள சிங்கள மக்களை முட்டாள்கள் என்று நினைத்து தூய்மையான புத்த மதத்தினை பின்பற்ற வேண்டிய பிக்குகளை வழிகொடுத்து, சிறப்பு மிக்க காவியுடையின் சிறப்பை இழக்கவைத்து, முஸ்லிம்களின் மத உரிமையினையும் . பொருளாரதார உரிமையினையும் பறித்து எடுத்து ,இனத் பேத கருத்துக்களை கூறி அவரது கட்சிக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யும் முதற்கட்டத்தின் வெளிப்பாடாகும்.
கேள்வி :- வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்தில் கல்பிட்டியிலுள்ள சிங்களவர்களது சொத்துக்களை பிடித்துக் கொண்டார்கள்; என்று அமைச்சர் சம்பிக்க தெரிவித்த கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?
பதில் :- வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதற்கு காரணம் வடக்கு முஸ்லிம்கள் நட்டுப் பற்றுடன் இருந்தமையாகும். அன்று இருந்த சிங்கள அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இதன் காரணமாக யுத்தம் நீடித்தது. இருந்தாலும் அரசாங்கத்தினையும் , அதன் அடிப்படை சட்ட விதிகளையும் முஸ்லிம்கள் மதித்து நடந்ததன் காரணமாக தழிழ் ஈழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் தடையாக அமைந்தார்கள். இதன் காரணமாக புலித் தலைவர்கள் வடக்கு முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அபகரித்து 100 ரூபாய்களுடன் வடக்கைவிட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். இந் நிலையில்தான் முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள கல்பிட்டியுக்கு அகதிகளாக்கப்பட்டார்கள். எனினும் 30 வருடகால யுத்தம் நீடித்தது. இதன் காரணமாக வடக்குக்கு செல்லமுடியாத சூழல் நீடித்தது. இதனால் அகதிகளாகப்பட்ட முஸ்லிம்கள் அன்று சிங்களவர்களுக்கு பயன்படாத கல்பிட்டியில் குடியிருப்புக்களை ஏற்படுத்த வேண்டிய நிலையும், பொருளாதர ரீதியாக சொந்த முயற்களில் முன்னேற்றம் பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அன்று வடக்கில் இருந்து வெளியேரிய முஸ்லிம்கள் அகதிகளாக்கப் படாவிட்டால் இன்று இருப்பதை விட பாரிய முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். பிறந்த இடந்தினையும் இழந்திருக்கக மாட்டர்கள். யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த ஏனை முஸ்லிம் பிரதேசங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது அகதிகளாக வடக்கு முஸ்லிம்கள் புத்தள கல்பிட்டிக்கு வந்ததன் காரணமாக கல்வி, சமூக உறவுகள், முக்கிய ஆவணங்கள், சொத்துக்ள் என்பனவைகளையும், பொருளாதார ரீதயாக மிகவும் பின்தங்கிய நிலைமையினையும்;; ஈடுசெய்ய முடியாத நிலையில் இன்று கூட காணப்படுகின்றார்கள். கல்பிட்டியில் அகதிகளாக தஞ்சமடைந்த முஸ்லிம்கள் எந்த சிங்கள மக்களின் சொத்துக்களையும் பலவந்தமாக பிடிக்கவில்லை. இலங்கையில் பிறந்த ஒருவர்; நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க முடியும் எனும் சட்ட விதிக்கு ஏற்ப முஸ்லிம்கள் குடியிருப்புக்களை கல்பிட்டியில் அமைத்தார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இருக்கும் போது பூனையைப் போல் இருந்த சம்பிக்க ரணவக்க அமைச்சர்க்கு இத்தரவுகள் தெரியாது என்பது அவரின் கருத்துகளின் மூலம் படித்த சமூகத்திற்கு தெரிய வருகின்றது.
கேள்வி :- அமைச்சர் சம்பிக்க முஸ்லிம்களைப் பார்த்து வரலாறு இல்லாத முஸ்லிம்கள் என குறிப்பிடுகின்றார் இது பற்றி உங்கள் கருத்து ?
பதில் :- நாங்கள் இலங்கையில் எழுதப்பட்ட வரலாற்று நூலினை வைத்து பார்க்கும்; போது. இலங்கையில் பின்பற்றி வருகின்ற பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்து வந்ததுதான் . நன்கு சிந்தித்துப் பார்த்தால் இலங்கையை இயக்கர்களையும், நாகர்களையும் தவிர வோறு எவரும் செந்தம் கொண்டாடுவதற்கு முடியாது. ஏன் எனின் புத்த மதம் கூட இலங்கையில் பரப்பப்பட்ட மதம்தான். இப்படியிருக்க இதற்கு முன்னால் வாழ்ந்த இனத்தினை சுத்துகரித்துத்தான் பௌத்த மதம் இலங்கையில் பரவியது என்பதனை இலங்கை வரலாற்றினை படித்த நாம் விளங்கிக் கொள்ள முடியும். இலங்கை பௌத்த மதம் வருவதற்கு முன் இருந்த சந்ததிகளின் நாடு என்பனை வரலாறுகள் குறிப்பிடுகின்றது. அமைச்சர் குறிப்பிடுவது போல் பார்த்தால் இலங்கையில் இருக்கின்ற எந்த இனத்துக்கும் வரலாறுகள் இல்லை என்பதனைக் காட்டுகிறது.
கேள்வி : சம்பிக்க ரணவக்க இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 20 பேரில் 17 பேர் இலங்கை முஸ்லிம்கள் என்று கூறியிருந்தார் இதுபற்றி நீங்கள் நினைப்பது ?
பதில்: - ஹெரோயினை வங்கிக் குடிப்பவர்களுக்குத்தான் இந்த எண்ணிக்கை தெரியும். எனக்குத் தெரியாது . இருந்தும் இஸ்லாத்தில் பேதைப்பொருள் தடுக்கப்பட்டுள்ளது. அதனை வியாபாரம் செய்தால் முஸ்லிம் என்று கூற முடியாது. இந்த கேள்விக்கு நான் தேடிய எந்த பத்திரிகைகளிலும் இதைப்பற்றிய தரவுகள் மற்றும் பதிவுகள் இல்லை சம்பிக்க ரணவக்கை மட்டும்தான்; குறிப்பிட்டு இருக்கின்றார்.
கேள்வி : இலங்கை உளவுப் பிரிவின் தகவலின் படி முஸ்லிம்களில் 4 வகையான முஸ்லிம் ஆயுதக் குழு இருப்பதாக தெரிவித்தார் இக் கருத்துப் பற்றி நீங்கள் நினைப்பது ?
பதில் : - அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவரிடம் இருப்பதை மற்றவரிடமும் இருக்கின்றது என்று கூறுகின்ற ஒருவர். அந்த வகையில் 4 ஆயுதக் குழக்களை அமைச்சர் உருவாக்கியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முஸ்லிம் ஆயுதக் குழு இருப்பதை கண்டு பிடித்த உளவுப் பிரிவு ஏன் ஆயுதத்தை கண்டு பிடிக்கவில்லை மற்றும் அக்குழவை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை.இதன் மூலம் தெரிவரும் விடயம் யாது எனின். சம்பிக்க ரணவக்க இலங்கையில் இருக்கின்ற நேர்மையான உளவுப் பிரிவை குற்றம் சுமத்துகின்றார் என்பதாகும்.
ஒரு இனத்திற்கு எதிரான புத்தகங்களை வாசிக்கத் தெரியாதவர்கள் அச்சிட்டு வருகின்றார்கள். அப் புத்தகத்தை விளங்கிக் கொள்வதற்கு வாசிக்கத் தெரிந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். அப் புத்தகத்தினை பணத்திற்காக ஏழைகள் வியாபாரம் செய்து வருகின்றார்கள். புரிந்து கொள்ளாதவர்களே புத்தகத்தினை எழுதி வருகின்றார்கள். கெட்ட புத்தகங்கள் நாட்டில் அதிகரிக்காமல் இருக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் புத்தகங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.
' என் இறைவனே ! என்னையும் என் சகோதரரையும் தவிர ( வேறெவருவரையும் ) நான் காட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் பரிந்த இந்த சமூதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளியப்பாயாக ! ' ( அல் குர் ஆன் )
இறுதி நாள் வரும் போது , தங்கட வாய [பேச்சை] வெச்சு உழைக்கிற கூட்டம் ஒண்டு உருவாகும் எண்டு ஒரு நபி மொழி கேள்வி பட்டிருக்கேன்.. இவன பாக்ககுல அது தான் ஞாபகம் வருது..
ReplyDeletethanks your news Jaffna Muslim . best
ReplyDeleteசிறந்த விளக்கம் நீங்கள் தருகின்றீர்கள் . நாங்கள் முஸ்லிம் எழுத்தளார்களை இப்படி காணுகின்ற போது மகிழ்ச்சியாக இருக்கின்ற இப்படிப்பட்டவர்களை சமூகத்திற்கு வெளிகாட்டும் ஜப்னா இணையத்தயம் நன்றி
ReplyDeletewhat ever you tell He doesn't agree Ranavaka nai
ReplyDeleteஅனைவராலும் உணரக்கூடியவிடயம் என்னவென்றால் சம்பிக்கரணவக்க வுக்கு மன நோய் பிடித்துள்ளது என்னபது, இவர் எடுத்துச்சொல்லும் ஒவ்வொருவிடயமுன் அரசாங்கத்துக்கும், சட்டத்துக்கும், மனித இனத்துக்கும், மனிதாபிமானத்துக்கும், முறனானது. இதைவிட விபரமாகக்கூறுவதென்றால் மனிதர்கள் ஒறுமைக்கு மிகவும் எதிரான கருத்துக்களையே சம்பிக்க வெளிக்கொண்டுவருகின்றார், இவருக்கு முஸ்லிம்களின்மீது தீராத ஆத்திரம் கோபமிருக்கலாம் அதற்காக தான் நினைத்ததையெல்லாம் கற்பனைகளையெல்லாம் மிகவும் அசிங்கமான விடயங்களையெல்லாம் வெளிப்படுத்துகின்றார் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம் இதில் கவலைக்குரியது இவர் மந்திரியாக இருப்பதுதான், இவர் ஏதோ ஒருவிடயத்தில் பாதிக்கப்பட்டு மன நோயாளியாக மாறியிருக்கின்றார் ஆகவே இவரை கண்டிப்பாக நல்லதோர் வைத்தியரிடம் பரிசோதித்து சிகிச்சைபெற்று இவர்குணப்பட்டு நாட்டில்வாழும் எல்லோருடனும் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு அரசாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிடில் நிலைமை மோசமடைந்து இவர் வீதிக்கு வரும் நிலைகண்டிப்பாக வரும். ஆகவே தயவு செய்து பெளத நண்பர்களோ வேறு யாரோ சகோதரர் சம்பிக்கரணவக்க வுக்கு உதவிசெய்து அவருடைய மன நோயை குணப்படுத்த உதவி புரிவோம்.
ReplyDeletePlease translate to sinhala this massage and foword to Champika goyya. this good and practical answer.
ReplyDelete2014 year podu sanvel isladdukku varum mutal nafraha irunddal addu campekkavahttan irukkum kavalypadavandam
ReplyDeleteplease checking campekka ranava brain Mr Mahinda Rajapaksa otherwise your gove win next election . thank you jaffan muslim this news .
ReplyDeleteஇன்றைய இனப்பிரச்சினையை கருவாகக் கொண்ட ஆக்கங்களை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்வது அவசியம்
ReplyDeletewe have some obligations to convey the message of islam to Paadali Sambika. He is very poor in knowledge to understand the way of Islam.
ReplyDeletechambika one day you will know what is the Islam that time you will be die . first please read good books if you not you can't live in this world as a good politician . best articles Jaffna Muslim
ReplyDeleteIt shld be translated to Sinhala and published!
ReplyDeletewell done jaffna muslim.com.we expect more articles should write in future about this situation.
ReplyDelete