Header Ads



மத்திய மாகாண பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு ஆளடையாள அட்டை



(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு உத்தியோகபூர்வ ஆளடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கும், நீண்ட கால சேவையுடைய முஅத்தின்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க தெரிவித்தார்.

இன்று 2013 03 20 மாலை கணடியிலுள்ள மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம் பெற்ற கலந்துறையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவத்தார்.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிவாசல்களில் பணிபுரியும் முஅத்தின்களது தூதுக்குழு ஒன்றை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையன் தலைவர் மவ்லவி பஸ்லுர் றஹ்மான் அவர்களது தலமையில் சென்ற இத் தூதுக்குழுவில் அக்குறணை ஜம்மியதுல் உலமா சபைனிள் கல்விப் பிரவின் செயலாளர் ஐ.ஐனுதீனும் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண பள்ளிவாசல்களில் பணி புறியும் முஅத்தின்கள் எதர் நோக்கும் பிரச்சனைகளை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிடம் மவ்லவி பஸ்லுல் றஹ்மான எடுத்துறைத்தார்.

ஏதிர் காலத்தில் அவர்களது பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கானப்படும் என்றும் முதலமைச்சர் இங்கு உறுதி அளித்தார்.



No comments

Powered by Blogger.