இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால்...!
(எச்.பைஸ் - அல் அஸ்ஹர் பல்கலைழக்கழகம்)
இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும் ஒரு சூழ் நிலையில் உள்ளனர். இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில் உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதேயே காரணம் காட்டி இலங்கை முஸ்லிம்களை முடக்க நினைப்பதை ஒரு போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இடமளிக்க கூடாது.
இன்னும் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் இலங்கை வாழ் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்து இருக்கும் ஒரு ஒரு நிலையே உள்ளது. எனவே இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால் அது இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க முற்பட்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விபரீதம் கடுமையாக இருக்கும்.
எனவே இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்படும் போது அதோடு சேர்த்து பின்வரும் விடயங்களும் தடை செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
1. அந்த இயக்கம் சார்ந்த பள்ளிவாயல்கள் அனைத்தும் சீல் வைத்து மூடப்படும்.
2. அந்த இயக்கம் சார்ந்த அரபு மதரசாக்கள் சீல் வைத்து மூடப்படும்.
3. அந்த இயக்கம் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு அவர்களின் சமூக சேவை செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
4. அந்த இயக்கம் சார்ந்த மார்க்க அறிஜெர்கள் உளவுத்துறையினரால் நாளா பக்கமும் கண்காணிப்புக்கு உட்படுப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள்.
5. அந்த இயக்கம் சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.
6. அந்த இயக்கத்தின் இணையத்தளங்கள் ,ஈமெயில்கள் அனைத்து வித தொலை தொடர்புகள் போன்றை இடை நிறுத்தப்படும்.
7. அந்த இயக்க மார்க்க அறிஜெர்களின் மார்க்க உரை , உபதேசங்கள் ,ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படும்.
8. அந்த இயக்கத்தினரின் மக்கள் தொடர்பாடல்கள் உளவுத்துறையால் நுண்ணியமாக அவதானிக்கப்படும்.
9. இந்த இயக்கத்தினர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஆர்ப்பாட்டங்கள் செய்வது , சமூக பிரச்சினைகள் பேசுவது இது போன்ற சமூக நல நிகழ்வுகள் இடை நிறுத்தப்படும்.
10. அந்த இயக்கத்தின் போது உடைமைகள் பறிமுதல் செய்யப்படும்.
11. அந்த இயக்க நிகழ்ச்சிகள் , மார்க்க உரைகள் சீடிகளாக , புத்தகங்களாக விற்பனை செய்வது தடை செய்யப்படும்.
இங்கே நான் குறிப்பிட்டது ஒரு சில விடயம் மாத்திரம் தான் இதையும் தாண்டிஇன்னும் சொல்வதாக இருந்தால் அவர்களது வீட்டில் தடுத்து வைத்தல் , கைது நடவடிக்கை ,சிறை வாசம் ,ஏன் தூக்கு தண்டனை கூட நிறைவேற்றப்படலாம். இதல்லாம் ஒரு இயக்கத்தை தடை செய்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் .இப்படி நடவடிக்கை மேற்கொண்டால் இலங்கை முஸ்லிம்களின் மூன்றில் ஒரு பகுதி குரல் முடக்கப்படும். பின்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குறையும் என்பது அவர்களது நம்பிக்கை .ஏனென்றால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர் . அது மாத்திரமல்லாமல் இவ்வாறு அரங்கேற்றும் போது நமது சமூகம் இதை பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் தான் உள்ளது . அந்தளவுக்கு விரோதம் நம் மக்கள் மத்தியில் வளர்ந்து காணப்படுகின்றது.
அதேபோல இன்று இருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கையில் நடக்கும் எல்லா பிரச்சினைகளையும் இது ஒரு இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தி எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற ஒரு நிலைக்கு வருவார்களாக இருந்தால் காலப்போக்கில் அது அனைத்து இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை . ஏனென்றால் இது ஒரு இயக்கத்தை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாக தெரியவில்லை மாறாக இலங்கை வாழ் முஸ்லிம்களை இல்லாமல் செய்ய எடுக்கும் ஆரம்ப நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது.
இலங்கை முஸ்லிம்களை நேரடியாக வெளியேற்றுவது சற்று பிரச்சினையான விடையம் என்பதால் ஒரு இயக்கத்தில் கையை வைத்து தமது நடவடிக்கையை மேற்கொள்வது அவர்களுக்கு சுலபமாக இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கும் வகையில் தான் இன்று நமது முஸ்லிம்களின் நிலையும் உள்ளது . அந்தளவுக்கு இயக்கத்தால் பிரிந்த நாம் விரோதத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம் . இந்த நிலை இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே இல்லாமல் செய்ய துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கு உதாராணமாக ஒரு கதையை கூட சொல்ல முடியும். அதாவது ஒரு காட்டில் வாழும் மூன்று பசுக்களும் ஒரு சிங்கம் பற்றிய கதைதான் அது. அந்த காட்டில் வாழ்ந்த மூன்று பசுக்களும் ஒன்றாக இணைந்து தமது அனைத்து நடவடிக்கைகளையும் மேட்கொண்டதால் அந்த சிங்கத்தால் இந்த பசுக்களை வேட்டையாட முடியவில்லை. ஆதலால் அது ஒரு திட்டம் தீட்டி இந்த பசுக்களை பிரிக்க முனைகிறது . அதற்கு அந்த சிங்கம் கையில் எடுத்த ஆயுதம் அந்த பசுக்களின் நிறத்தை ஆகும். அந்த மூன்று பசுக்களுக்கும் மத்தியில் நிற பேத வேற்றுமையை உண்டு பண்ணி அவைகளை பிரித்து விடுகிறது.
இப்போது அந்த மூன்று பசுக்களும் பிரித்து விட்டன . இந்த தருனத்தில் தனது திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி தனது வேட்டையை ஆரம்பிக்கின்றது.
முதலில் ஒரு பசுவை வேட்டையாடியதும் மற்ற இரு பசுக்களும் சந்தோசமடைகின்றன. தங்கள் எதிரி அழிந்து விட்டான் என்று. ஆனால் இது தங்கள் அழிவின் ஆரம்பம் என்பதை தங்களுக்குள் இருந்த விரோதம் மறைத்து விட்டன . இறுதியில் மூன்று பசுக்களும் வேட்டையாடப்படுகின்றன .சிங்கம் தனது திட்டத்தில் பூரண வெற்றியடைந்து சந்தோச பூரிப்பில் வாழ்ந்து வந்தது.
இதே பாணிதான் இன்று இலங்கையிலும் அரங்கேற்றப்படப்போகின்றன. இதை நாம் அறியாமல் அரை தூக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். இந்த தூக்கத்தில் இருந்து விழித்து இந்த சூழ்ச்சி வலையில் நாம் மாட்டிக்கொள்ளாமல் தங்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இலங்கை முஸ்லிமுக்கும் இருக்கிறது. அதற்கு இயக்கம் ஒரு தடையாக இருக்க கூடாது .ஒரு இயக்கத்தின் மீதுள்ள விரோதம் நம் இருப்பை இல்லாமல் செய்ய உதவியாக இருக்க கூடாது . இயக்கத்தால் வேறுபட்ட நாம் இருப்பை தக்க வைக்க ஒன்றிணைய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் இறைவன் துணைபுரிவான் .
Absolutely, each n everyone should be concentrate on this issue.
ReplyDeleteevery village need a jamiyathul ulama group with the representation of all these group, then governemnt cannot take any action
ReplyDeletethis will show our unity and diferences can be settled among our selves
இங்கு ஐமாஅத்துக்கு “இயக்கம்“ என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பது முதலாவது பிழை. அப்படி என்றால் “இஸ்லாம்“ என்பது ஓர் இயக்கம் என்று ஆகிவிடும். அடுத்து இந்த விடயங்களைக் கூறித்தான் ஆகவேண்டும் என்றால், இயக்க வெறிபிடித்த பலர் பெறுப்பாளர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்களிடம் இந்த செய்தி போய்ச்சேர வேண்டும். அவர்களால்தான் காட்டிக்கொடுத்தல்கள் நடைபெற்று பிரிவினை பலம்பெற்று விடுகின்றது. எனவே, வெறிபிடித்தவர்களை வெளியேற்றுவது முதற்செயற்பாடாக இருத்தல் நல்லது.
ReplyDeleteInshallah Allah namakku thunai puryvan vattry namakku porapadunkal
ReplyDeleteவேற்றுமையில் ஒற்றுமை காண்போம்
ReplyDeleteசகோதரர் கூறுகிறார் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிறிதொரு மற்றம் மாற்று கருத்துக்களிலும் ஒற்றுமை காண்போம் என்றால் சரியாக இருக்குமே :)
ReplyDeleteஇந்த விடயங்களை இவ்வாறு இவ்வாறுதான் செய்யப்படும். இதன் பின் இது நடக்கும் என்று சட்டங்கள் ஒன்றும் இல்லை. சிரரின் எண்ணங்களும் கதைகளும் கற்பனைகளும் சில சக்திகளினால் நடை முறைப்படுத்தப்படுகின்றது. அதாவது சில பொய்களை பரவலாகப் பேசுவதன் ஊடாக அதனை உண்மையாக மாற்றிவிடுகின்ற தந்திரோபாயம் ஒன்றுதான் இன்று நாட்டில் நடக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு எமது கருத்துக்கள் கற்பனைகள் கூட இவற்றுக்கு துணையாக அமைந்துவிடுகின்றது. உதாரனமாக ஹலால் விடயத்தின் பின் ஹிஜாப் விடயத்தினைப் பேசுவோம் என்று பொது பல சேனா சொல்வதற்கு முன்னமே நாங்களே ஆருடம் கூறிவிட்டோம் இதன் பின் ஹிஜாப் பிரச்சினையைத் தூக்குவார்கள் என்று. இது பொது பல சேனாவின் வேலைக்கு நாங்களே வாய்க்கால் வெட்டி வழி எடுத்துக் கொடுப்பது போன்றதுதான். இதுபோன்றுதான் இயக்கங்கள் தடை செய்யப்பட்டால் இதனைத் தொடர்ந்து இவ்வாறு இவ்வாறு செய்வதற்கும் வசதி வாய்ப்புக்கள் உள்ளது. இது தொடர்பாகவும் நீங்கள் கவணம் எடுங்கள் என்று பொது பல சேனாவுக்கு ஆலோசனை சொல்கின்ற ஆலோசகர்களாக எமது கட்டுரைகளும் ஆக்கங்களும் அமைந்து விடுமோ என்று இந்த இடத்தில் நாம் சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம். சிந்தனை ரீதியான பலமா யுத்தமொன்று வெடித்துள்ள இக்காலத்தில் மிகவும் தந்திரதமாக எமது சிந்தனை வியூகத்தினையும் நகர்வுகளையும் திட்டமிடவேன்டியுள்ளது சகோதரர்களே. (தவறாகப் புரிந்திருந்தால் மண்ணிக்கவும்)
ReplyDeleteஇதைப்பற்றி நான் உண்மையொன்றை சொல்ல விரும்புகின்றேன் குர்ஆன்,ஹதீஸ்,+,+ லாயிலாக இல்லல்லாஹ் முகமதுரசூலுல்லாஹி- இதை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல (இதை பின்பற்றாத 2 பிரிவினர் உள்ளது என்பது வேறுவிடயம்) எல்லோரும் (99 % வர்கள்) இதைத்தான் பின்பற்றுகிறார்கள் உதாரணமாக 5000,2000 நோட்டுக்கள் எல்லாவகை முஸ்லிம்களின் பொக்கட்டுக்களில் உள்ளது போல ஆனால் அவர்கள் சண்டையிடுவது (lessthan 5%) 25 சத சில்லறைக்காக ஒவ்வருவகையினரும் எண்ணுவது தங்களிடமுள்ள 25 சத நாணயம் தங்கத்திலானதென்றும் மற்றவர்களிடமுள்ளது தகரத்தினாலதென்ரும் எண்ணுகிறார்கள் இதுவே பிரச்சனைக்கு மூலகாரணம் இந்த 25 சத நாணய பிரச்சனையை தீர்கவருபவர்கள் (PBS ) கடைசியில் உங்கள் அனைவரிடமுள்ள 5000,2000/= நோட்டுகளை திருட முயற்சிப்பதே இன்றைய நிலை தயவுசெய்து சில்லறை பிரச்னையை விட்டுவிட்டால் உங்களிடமுள்ள 5000,2000 நோட்டுக்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ReplyDeleteகுறிப்பு:ஒப்பீடுக்காக குர்ஆன்,ஹதீஸ் 5000/=,2000/= விபரிக்கப்பட்டதை பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம்.
do not publish this kind of essay it looks you are guiding our opponent
ReplyDeleteto their work easier now all 3 jamat know this very well they will cooperate each other
கட்பனைகளை அடக்கியும் வாசிப்போம்
ReplyDeletemuzalil idea koduppazai niruthungal.enda iyakkamaanalum muslimgalenru vaalvom
ReplyDeletePast is past unity is important
ReplyDeletepls dont issue kind of essay in jaffnamuslim.com.
ReplyDeletepls think before di\o something
Dear Publisher, Please remove this article for the sake of our umma's unity.
ReplyDelete