காத்தான்குடியில் பெண்கள் தொழுவதற்கு தனியான பள்ளிவாயல் (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம் பெண்கள் வசதி கருதி பெண்களுக்கும் வழுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவியும் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் காத்தான்குடி நகர சபை முதல் பெண் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் தவிசாளரும் உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஸீர் ஸேகுதாவூத்தின் முயற்சியின் பயனாக சவூதி அரேபியோவின் நன்கொடையாளர் ஒருவரினால் சுமார் 21 இருபத்து ஒரு இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள மௌலானா கபுறடி பள்ளிவாயலுக்குப் பின்னால் தனியாக பெண்கள் தொழுவதற்கு மஸ்ஜிதுஸ் ஸய்யிதா பத்ரிய்யா அஹ்மட் என்ற பெயரில் பள்ளிவாயல் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸூபஸ் தொழுகையுடன் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹியினால் விஸேட பயான் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
மஸ்ஜிதுஸ் ஸய்யிதா பத்ரிய்யா அஹ்மட் என்ற பெயரில் இன்று திறந்துவைக்கப்ட்ட இப்பள்ளிவாலுக்கான நிதி கடந்த வருடம் ஹிஜ்ரி -1434 ரமலான் மாதம் ஒதுக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இன்று திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாயல் இலங்கையில் நாலா பாகங்களிலும் இருந்து காத்தான்குடிக்கு வருகை தரும் முஸ்லிம் பிரயாணிகளின் வசதி கருதியும், பெண்கள் தனியாக தொழுவதற்குமாக மாத்திரம் திறந்துவைக்கப்பட்ட பள்ளிவாயல் என்பது குறிப்பிடத்தக்கது.
masjid for ladies??? this is not guided in the period of mohamed (pbuh)there were masjid with the arrangements for ladies... but, no individual masjid was built for ladies.... this is newly invented...
ReplyDeleteஇங்கு இருப்பவர்கள் அனைவரும் பெண்களா?
ReplyDeleteவிரல் நிட்டுவட்கற்கும், ஆட்டுவதற்கும் நாம் மஸ்ஜித்கலை; வெளிநாட்டு பணத்தால் நிறுவினோம். பிறகு ஊரை பிரித்தோம் . அன்றோ நாம் வுள்லூர் தனவந்தர்களின் பணத்தால் மஸ்ஜித்களை நிறுவினோம். உருக்கு ஒரு மச்ஜிட்த்தும், ஒரு மத்ராசாகளும்தான் இருந்தன. இன்றோ நாம் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்காஹ் பணத்துக்கு ஆசைபற்று சமுஹத்தை பிரித்து அல்றோம்; அற்ப சொற்ப கேவல ரியாளுக்காஹ்ஹவும், டினாருகாஹ்ஹவும். ஊரில்உள்ள மஸ்ஜித்ஒட பெண்கள் தொழுகை அரை ஒன்று நிர்மாணிப்பது பித்அத் அல்ல. ஆனால் இது பித்அத். சுத்த ஹாறாமான செயல். இதை உடனடியாக முஸ்லிம் கலாச்சார அமைச்சு பணிப்பாளர் தடை செய்து பெண் சிறார்களின் குரான் மத்ராசாவாஹ மாற்றி அமைக்கபடவேண்டும். வேண்டாம் இலங்கைக்கு தலிபான் கொள்கை. வேதனை தருக்இறது முத்த, பழுத்த,அனுபவம்வாய்ந்த, சிறந்த தேயிச்சிபெற்ற , புகழ்மிகு உலமாக்களும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பைதை இற்று. இது பற்றி உடனடியான தேளிவு வேண்டும்.
ReplyDeleteபெண்களுக்கு தனியான பள்ளிவாசலா? இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புகுத்தி இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவார்கள் காலத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒரே பள்ளிவாசலில் தான் தொழுதார்கள். இது சுன்னாஹ்விற்கு முரணான செயல் என்பது உனது கருத்து
ReplyDelete