சுனாமி வீட்டுத்திட்டமும், நேர்முகப்பரீட்சையும்
(அபு ஐமால்)
ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்து 8 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் இன்னும் பாதிக்கப் பட்ட மக்களுக்காக சவுதி அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளுக்குக் கிடைக்கவில்லை. 100 & முஸ்லீம்களுக்குக் கொடுப்பதற்காக கட்டப்பட்ட இவ்வீடுகள் விடயத்தில் பேரினவாதிகளின் எதிர்ப்புக்கள், சட்ட நடவடிக்கைகள் என்பவற்றால் பல வருடங்களாக வீடுகள் வழங்கப்படாமல் இருந்ததனால் காடுகளும் விசஜந்துக்களும் இங்கு பெருகிவிட்டன.
நியாயமாகப் பார்த்தால் சிங்களவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளில் அல்லது தமிழர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளில் முஸ்லீம்கள் பங்கு கோரியதாகவோ அல்லது வீடு வழங்கப்பட்டதாகவோ சரித்திரமில்லை. மாறாக இவ்விடயத்தில் முஸ்லீம்களுக்கு தெளிவாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள்;இ வாதப்பிரதிவாதங்கள், வம்புகள், வழக்குகளின் பின்பு 500 வீடுகளில் 304 வீடுகள் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வெண்ணிக்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த பயனாளிகள் தெரிவு என்ற போர்வையில் நேர்முகப் பரீட்சைகள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றன. ஏலவே பாதிக்கப்பட்ட மக்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பிரதேச செயலகம் தொலைத்து விட்டு மீண்டும் ஆவணங்களைக் கோருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கரையோரப் பிரதேச மக்கள் கல்வி அறிவு குறைந்த மீன்பிடிசார் தொழில் புரிபவர்கள். இன்னும் சிலர் புட்டம்பையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு குடியேறியவர்கள் இவர்களால் ஆவணங்களைத் தேடிப்பெற முடியாமல் திண்டாடுகின்றனர். மின்சாரமின்றி குப்பி விளக்கில் வாழ்ந்தவர்களிடம் மின்சாரப்பட்டியலையும்;இ உடமைகளையே இழந்து தவிக்கும் இவர்களிடம் காணியின் உறுதிஇ அகதிகள் முகாமில் ஒருவேளை உணவிற்கு வசதியற்றிருந்த இவர்களிடம் உடைந்த வீட்டின் புகைப்படம் கோரினால் இவர்கள் என்ன செய்வார்கள்.
இவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரே ஒரு ஆவணம் சுணாமி ரேசன் கூப்பன் மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களிடம் மேலும் மேலும் ஆவணம் கேட்டு தொல்லை வழங்கினால் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட 304 வீடுகளும் ஏனைய சமூகத்திற்குச் சென்று விடும் போல் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தொந்தரவு செய்வதைப் பிரதேச செயலகம் கைவிட்டு எம் இனத்திற்கான வீடுகளைப் பாதுகாப்பதில் இறங்க வேண்டும்.
இவ்விடயத்தில் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுவழங்குவதற்காக எங்குமே நேர்முகப்பரீட்சை நடாத்தப்படவில்லை. மாறாக அக்கரைப்பற்றில் மாத்திரம் நேர்முகப்பரீட்சை நடாத்தப்படுவது எந்த வகையில் நியாயம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வினாவுகின்றனர்
ஏன் சுனாமிக் காலத்தில் கடமை ஆற்றிய அப்பிரதேச அபிவிருத்தி உதியோகத்திரடம் எல்லாம் இருந்திருக்குமே ?
ReplyDeleteவடிவேலு : - எல்லாம் அவன் செயல் ........
(இதற்கெல்லாம் காரணம் மண்ணின் மைந்தன் )
ஒரு மாநகரசபைக்கு அருகதை அற்றவனை தலைவராக்கலாம், கிழமைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் பள்ளிக்கு வரும் தனக்கு தான் விரும்பும் தன் அடிவருடிகள் பள்ளி நிர்வாகிகளாக வேண்டும்.
தன் மக்களுக்கு கிடைக்க வேண்டிய 540 வீடுகளையும் பிடுங்கி கொடுத்தது போதாமல் நேர்முக பரீட்சை வேறு ? ஏழைகளின் வயிற்றில் அடித்த உமக்கு தலைவர் பதவியும் , அமைச்சர் பதவியும் .....கறுப்பு கன்னாடிகளுக்குள்ளிருந்து கை காட்டும் உமக்கு ஏழைகளின் நிலை என்று புரியுமோ ?