Header Ads



ஹலால் + ஹபாயா + தொப்பி பற்றி ஏன் மௌனம்...!


(ஏக்கூப் பைஸல்) 
'ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலை நினைத்து வருகிறான். மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு தலைவன் அடுத்த தலைமுறையைப் பற்றி நினைத்து வருகிறான். '

எங்கள் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன் அனைத்தும் இலகுவானது என்று கூறுகின்றார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அனைத்தும் சிக்கல் நிறைந்தவையாக இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். தேர்தல் காலங்களில் இனப் பற்றினையும், எங்களது கட்சி அரசாங்கத்துடன் இருந்து மக்களின் உரிமையை பெற்றுத் தரும் என்றும்  பலமாக கத்திப் பேசி வாக்குகளை பெற்று அமைச்சுப் பதவியின் நாற்காலியை அடைந்து விடுகின்றார்கள். பெரும் பான்மையினரினால் சிறுபான்iயினரின்   உரிமை , சுதந்திரம்  பறிக்கப்பகின்ற போது கூட உரிமையை பெற்றுக் கொடுக்க பாராளுமன்ற கதிரையை விட்டு எழுந்து பேச மறுக்கின்றார்கள்.  பெரும் பான்மையினரினால் பறிக்கப்பட்ட உரிமைகளை கூட பறிக்கப்;படவில்லை என பாராளுமன்றத்தில் கூறுகின்ற நிலையிலையினை சிறுபான்மைத் தலைமைத்துங்கள் செய்துவருவதை அன்மைக் காலங்களாக நாங்கள் சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.  

இனப்பற்றுள்ள தலைவர்களை நாங்கள் சந்திக்காத வரை எங்களது தலைமுறைகள் தலைநிமிந்து வாழ முடியாத சூழல் தொடரும் என்பதனை மறுக்க முடியாது. எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற உரிமைகளை திருப்பிப் பெற்றுத்தருவது ஆளுமையுள்ள தலைமைத்துவங்களின் கடமையாகும்.

ஆனால் எமக்கான தலைமைத்துவம் சுயநலத்துடன் செயற்படுகின்றது என்பதனை நாங்கள் மறுக்க முடியாது. எங்களுக்கு எதிரான போராட்டம், பள்ளிவாசல்களின் தகர்ப்பு, எமக்கு எதிரான வாசகங்கள், பன்றியின் உருவத்தில் இறைவனின் பெயர்,பொது இடங்களில் எம்மை தூற்றும் வாசகங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலை காணப்படுகிறது. 

இந் நேரத்தில் எங்களது  அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருந்து நாங்கள் ஹலால் சின்னம் பதித்த உணவினை இழந்து விட்டோம். 

2013.03.21 ஆம் திகதி கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸாவில் கடமையாற்றும் மௌலவியின் தொப்பியை  சிங்கள சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அவமானப்படுத்தினார்கள் மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்  பெண்மணியின் பர்தாவையும் கேலி செய்தார்கள். 2013.03.18 ஆம் திகதி மன்னம்பிட் தாபல் நிலைய அதிபராக கடமையாற்றும் பெண்ணின் பர்தார்தவையும் இனந் தெரியாத குழுவினர்கள் அபகரிக்க முயற்சி செய்தார்கள். எங்களுக்கான பாதுகாப்பினையும், மதச் சுதந்திரத்தினையும் பெற்றுத் தருவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. முஸ்லிம்கள் தாக்கப்படுவதை முதல் பேச வேண்டிய ஆளும் கட்சி அஸ்வர் எம்.பி கூட இது வரை முஸ்லிம்களுக்காக வாய்திறக்கவில்லை ஆனால் பிக்குகள் தாக்கப்பட்டதற்கு ஜெனீவாவரையிலும் விவாதிக்க வேண்டுகோள் விடுத்தார.

மொத்தத்தில் இன்று  நமக்கான   தனித்துவ இருப்புக்களுக்காக நாமே போராட வேண்டிய நிலை வந்துவிட்டது.

நம் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினார்கள் பாதி நேரத்தை நேரத்தை சட்டங்கள் இயற்றுவாற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். மீதி நேரத்தை இந்தச் சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு, தன் நண்பர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

6 comments:

  1. They are leading us when we don't have any problem..
    They are ignoring us when we are in trouble...
    Alhamdulillah! even now we able identify their real face and we must use our votes in a proper way in future..

    ReplyDelete
  2. இங்களுக்கு இஸ்லாத்தை படிக்க வைக்கனும். இல்லையெற்றால் எங்களுக்கு அப்புவைத்துவிடுவாங்க .

    ReplyDelete
  3. அரசாங்கத்தை ஆதரிக்கின்றவர்கள் பொய்யர்கள்

    ReplyDelete
  4. if you a man Muslim minsters don' come election our place

    ReplyDelete
  5. Our Muslims leaders are born liar. It's not good for us to believe them here after. We have to thanks Allah for showing us their real face. Now we have realized everything. We don't want expect anyone's help here after. Oh Allah, Please help Muslims,.

    ReplyDelete
  6. ஐயோ! பரிதாபம். தன் வயிற்றுப் பசிக்காக அரசியலில் இணைந்து மார்க்கத்தை இழக்கும் துர்ப்பாக்கியவான்கள். இவர்களுக்கு இஸ்லாத்தைப் புரியவைப்பது யார்? ''யார் எந்தக் கூட்டத்துக்கு ஒப்பாகின்றாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே'' எனக் கூறியது நபி (ஸல்) அவர்கள். ஒரு சாராருக்கு மறுமையில் ''நீங்கள் காரணம் (சாக்குப் போக்கு) கூறவேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டதன் பின் இறை நிராகரிப்பில் ஈடுபட்டீர்கள்'' என மறுமையில் கூறப்படும் என அல்குர்ஆன் கூறுகிறதே. அரசியல் உங்கள் ஈமானுக்கு வேட்டு வைப்பதாக இருந்தால், இஸ்லாமிய அடிப்படைகளை மீறுமென்றால் அதனைத் தூக்கி எறிந்துவிட்டு பிச்சை எடுத்தாவது இஸ்லாத்தில் வாழ்ந்து மரணிப்பதே சிறந்தது என்பதை இவர்கள் உணர்வார்களா?

    ReplyDelete

Powered by Blogger.