உலமா சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகும் - றிஸ்வி முப்தி
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது ஹலால் சான்றிதழ் குறித்த தனது இறுதித் தீர்மானத்தை நாளை திங்கட்கிழமை, 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென அதன் தலைவர் றிஸ்வி முப்தி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இதுதொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. எமது முடிவை நாளை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம். அந்த முடிவுதான் ஜம்மியத்துல் உலமா சபையின் உத்தியோகபூர்வ முடிவாக அமைந்திருக்கும் என்றார்.
உங்கள் முடிவு சரியானதாக இருக்கவேண்டும். ஹலால் இருந்தால் எல்லா நாடு களுக்கும் இருக்கனும். இல்லையென்றால் எங்கும் வேண்டாம் முட்டாள் தனமாக முடிவு செய்ய வேண்டாம் . நீங்கள் ஸ்ரீலங்கா உலமா சபை எமது நாட்டை முதலில் பார்க்கவும் உங்கள் முடிவு அனைத்து முஸ்லிம்களின் முடிவு நிதானமாக முடிவெடுக்கவும்.
ReplyDelete