Header Ads



நாட்டை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பௌத்த பிக்குகள் செயற்படுவார்கள்



இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை ஓர் ஜனநாயக நாடு எனவும், சகலருக்கும் பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமன்றி பௌத்தர்களின் நடவடிக்கைகள் ஏனைய மதத்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தக் காத்திருப்போருக்கு விரலை நீட்ட அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் செய்யும் அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் சிறந்த முன்னுதாரணங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்பதனை அறிந்து அதன்படியே பௌத்த பிக்குகள் கடமையாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பௌத்த பிக்குகள் செயற்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தவறிழைத்தால் அதனை மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்ட வேண்டும் அந்த பொறுப்பு இன்றைய பௌத்த பிக்குகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவே எப்போதும் விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


5 comments:

  1. ஒன்னுமே புரியல்லே உலகத்திலே......... என்னெமோ நடக்குது மர்மமாய் இருக்குது ............ ஒன்னுமே புரியல்லே உலகத்திலே .........

    ReplyDelete
  2. போகப் போகப் புரியும், இந்த நரியின் நாடகம் முடியும்.

    ReplyDelete
  3. ஒன்னுமே புரியல்லே உலகத்திலே......... என்னெமோ நடக்குது மர்மமாய் இருக்குது ............ ஒன்னுமே புரியல்லே உலகத்திலே .........

    ReplyDelete
  4. பொதுபலசேன போன்ற குழுக்களின் செயல்பாடு நாட்டில் அழிவையே உண்டாக்கும் என்று மஹாச்ங்கம் தெட்டத்தெளிவாக அறிவித்தும் ஜனாதிபதி ஏன் இன்னும் பொதுபலசேனவை கைதுசெய்யவில்லை அல்லது அவர்களுக்கு உரியமுறையில் செய்யவேண்டியதை செய்யவில்லை.

    பொதுபலசேனபோன்ற இனவாதிகள் விடயத்தில் இதுவரைக்கும் மெளனம் காத்துகொண்டேயிருக்கும் அரசாங்கம், நாட்டில் சகலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதென்றும் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஸமாகவும் வாழ்கிறார்கள் என்று அடிக்கடி தற்போது சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?

    ReplyDelete
  5. mahanayakes advised against sarath fonseka matter and shirani B matter. your excellency were able to go against them. but BBS is with you. people will never forget this.

    ReplyDelete

Powered by Blogger.