சவூதி இளவரசியிடமிருந்து ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவு
மிதமிஞ்சிய ஷாப்பிங் செய்து, வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்ட முடியாததால் சவுதி இளவரசியிடமிருந்து இந்திய ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்யும்படி பாரிஸ் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த இளவரசர் நையப் பின் அப்துல் அசிஸ் அல் ஸௌதின் மனைவியாக இருந்த, மஹா அல்-சுதைரி பாரிஸ் நகருக்கு செல்லும் போதெல்லாம் நிறைய ஆடம்பர பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார். கடந்த ஆண்டு நான்கு நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி லாவில் ஒரு தளத்தையே எடுத்து 60 பணியாளர்களுடன் ஆறு மாதங்களுக்கு தங்கி இருந்தார். ஆனால் அதற்கான தொகையான ஐம்பது கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை. சவுதியின் அரசர் இந்த தொகையைக் கட்ட மறுத்தவுடன் பாதுகாப்பு கோரி வேறு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அவருக்கு கடன் கொடுத்த ஆறு நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முடிவில் இளவரசி பதிவு செய்திருந்த மூன்று சேமிப்பகத்தை திறந்து, அதனுள் இருக்கும் ஆடம்பர பொருட்களை விற்று கடனை அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எல்லா பொருட்களையும் மதிப்பீடு செய்து பின்னர் ஏலத்தின் மூலம் விற்க வேண்டும் என்பதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஏற்பட்டது.
Post a Comment