Header Ads



முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவதில் வெற்றிகண்ட பொதுபல சேனா



(தெல்தோட்டையிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஜெஸீம்)

இலங்கை முஸ்லிம்களின் மார்க்க மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் பொது பல சேனா தனது முதல்நிலை நோக்கமாக முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி விட்டு அதில் குளிர்காயும் பாங்கையே கடைப்பிடித்து வருகிறது. இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் 20 சத வீதம் செல்வாக்குச்செலுத்துகின்றனர் என்று பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகினறன. ஆனால் இவர்களின் குற்றச்சாட்டில் எவ்வித நிதர்சனமும் கிடையாது. புள்ளி விபரங்களை சரியாக ஆராய்ந்து பார்த்தால் முஸ்லிம்கள இலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் வெறும் 3 சத வீதமே செல்வாக்கு செலுத்துகின்றனர். அந்தளவு முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளனர். நிலைமை இவ்வாறாக இருக்கும் போது  பொது பல சேனா ஏன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் முதலில் மூக்கை நுளைக்க வேண்டும்? அதிலென்ன அவர்களுக்கு பிரயோசனம் இருக்கிறது? போன்ற கேள்விக்கணைகள் சிந்தையில் உதயமாகின்றன்.

இதன் பிண்ணனியை ஆழமாக சிந்திக்கும் போது ஓர் இனக்கலவரத்திற்கான மூட்டுவதற்கான யுக்தியாகவே அமைந்திருக்கிறது. இலங்கை வரலாற்றை படிக்கும் போது முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி விட்டதன் விளைவாகவே 1915 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டு முழு இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தகைய கலவரம் ஒன்றையே இன்றைய இனவாதிகள் எதிப்பார்ப்பதாக வெளிப்படையாகவே தென்படுகிறது. 1915 ஆம் ஆணடு இனக்கலவரத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தான் அநாகரிக தர்மபால. இவரின் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி பாய்ந்தன. அவரது ஒவ்வொரு சொல்லும் முஸ்லிம்களை தாக்கின. 'முகம்மதியர்கள் அநநிய இனத்தைச் சார்ந்தவர்கள்', 'பிரித்தானிய அரசாங்கம் சிங்களவரைச் சுடலாம்... தூக்கிடலாம்... அங்கவினப்படுத்தலாம்... சிறைப்பிடிக்கலாம்... ஆனால் சிங்களவர்க்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் என்றைக்கும் இரத்த வெறுப்பு இருக்கும்.'. அநாகரிக தர்மபாலயின் இத்தகைய வார்த்தை பிரயோகங்களையே இன்று பொது பல சேனா சிங்களவர்களின் உள்ளங்களில் விதைக்க முற்படுகிறது.

பொது பல சேனா முஸ்லிம்களின் ஒட்டுமொத்த அனைத்து உரிமைகள் விடயங்களில் கைவைத்திருக்கின்றனர். முஸ்லிம்களின் ஒழுக்கவியல், கலாச்சாரம், பொருளாதாரம், சமூகவியல், கொள்கைக் கோட்பாடுகள் போன்ற எல்லா துறைகளையும் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற வேட்கையில் வெளிக்கிழம்பி இருக்கின்றனர். இதில் அவர்கள் முழுமையாக வெற்றிப்பெற்று விட்டார்கள் என்று கூற முடியாவிடினும், அவர்களின் போராட்டத்தில் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை அடைந்து வருகிறார்கள் என்ற கசப்பான உண்மையையும் கூறித்தான் ஆக வேண்டியிருக்கிறது. பொது பல சேனாவின் தோற்றத்திற்கு பிற்பாடு பெரும்பான்மை சமூக மக்களிடையே ஒரு வித மாற்றத்தை காண முடிகிறது. அவர்களின் வித்தியாசமான போக்குகள், துவேச செயற்பாடுகள், வார்த்தைப்பிரயோகம் இம்மாற்றத்தினை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகின்றன. முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் அவர்களின் மாற்றத்தினை அன்றாடம் அவதானிக்க முடிகிறது. இதற்கு பல சம்பவங்களைக் கூற முடியும். (தெல்தோட்டை பிரதேசத்தில் நிகழ்ந்தவை)

* முஸ்லிம் கடைகளுக்கு வரும் சிங்கள மக்கள் பொருட்கொள்வனவின் போது முதலில் நோட்டமிடுவது குறித்த பொருளில் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதா என்று.. அவ்வாறு அப்பொருளில் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்டிருப்பின் அதனை கொள்வனவு செய்வதிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம் வியாபாரிகள் தமது பொருட்களை விற்பனை செய்வதில் சற்று சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

* தெல்தோட்டைக் கிராமத்தில் முஸ்லிம் ஒருவருக்கு உரித்தான தகர அலுமாரிகளை உற்பத்தி செய்யக்கூடிய மிக பிரபலமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதில் தொழிற் செய்யக்கூடியவர்களில் அதிகமானோர் சிங்கள இனத்தவர்கள் ஆகும். அண்மைக்காலமாக இந்நிறுவனம் பெரும் சவாலுக்கு உட்பட்டிருப்பதாக அதன் கணக்காளர் கூறியிருந்தார். அத்தொழிற்சாலையில் வேலை செய்த சுமார் 30 க்கும் மேற்பட்ட சிங்கள இன ஊழியர்கள் ஒரேயடியாக வேலையை விட்டு நீங்கிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாh. அவகளுக்கு வேறு சிறந்த தொழிலை அமைத்து தருவதாக கூறி ஆசைக்காட்டப்பட்டே அவர்கள் அத்தொழிலை விட்டு விலகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

*  எமது ஊரில் சீசன் வியாபாரம் (Season Business) செய்யக்கூடிய அனேகமான சகோதரர்கள் இருக்கின்றனர். நாட்டில் எங்காவது விசேட வைபவங்கள், நிகழ்வுகள் நடக்கும் போது அங்கு சென்று தமது வியாபாரத்தை சிறப்பாக மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது பொது பல சேனாவின் தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு அவர்களது வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சிங்கள கிராமங்களுக்கு போக முடியாது எனவும் அங்கு சென்றால் தமக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள புத்தாண்டை மையமாகக் கொண்டு பல இலட்ச ரூபாய்களை வியாபாரத்தில் போட்டு பொருட்களை கொள்வனவு செய்த அவர்கள், சிங்கள கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்வதற்கு தற்போது பயப்படுகின்றனர்.

* கடடுகஸ்தோட்டை, மஹிய்யாவ பகுதியில் பெரும்பான்மையோர் சிங்களவ இணத்தவர்களே வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. அப்பகுதியில் தெல்தோட்டக் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஹோட்டல் ஒன்றை நடாத்தி வருகிறார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அதை எவ்வித குழப்பமோ சண்டை சச்சரவு இன்றி செய்து வருவதோடு சிங்கள மக்களும் அவர்களுக்கு ஒத்தாசை கொடுத்து வந்தனர். சிங்கள மக்கள் துணையின்றி வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு அவர்களது பங்களிப்பு அளப்பரியதாக காணப்பட்டது. பொது பல சேனா எப்போது துவேச உணர்வுகளை கக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அந்த ஹோட்டல் வியாபாரம் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் மிகவும் கவலையுடன் குறிப்பிட்டார். சிங்கள மக்கள் தம்மிடம் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்ந்து வருவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

* அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கு சொந்தமான பல வியாபார நிறுவனங்கள் திட்டமிடப்பட்டு முடக்கப்படுவதாகவும் அறிய வருகிறது. காசோலைக்கு பொருட்களை கொள்வனவு செய்து அக்காசோலையில் நுனுக்கமான குளறுபடிகளை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம் வியாபார நிலையங்களை முடக்க முற்பட்டிருக்கின்றனர். இச்சதி வலைக்கு மாட்டிக் கொண்ட ஓர் வியாபாரி கவலையோடு இதனைச் சுட்டிக்காட்டினார்.

இப்படி எத்தனையோ பாரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான பொருளாதார வீழ்ச்சியை எம் சமூகம் சந்தித்து வருகிறது. இதில் பிரபலமான விடயங்களே ஊடகங்களில் வருகின்றன. சிறிய விடயங்களும் ஊடகங்களுக்கு வர வேண்டும் அப்போதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளின் திட்டமிடப்பட்ட நடவடிக்கையை அறிந்து கொள்ள முடிவதோடு அவர்களின் சதித்திட்டங்களுக்கு எதிராக எமதான செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெறல் வேண்டும் என்பதையும் சிந்திக்க முடியும்.

பொது பல சேனா என்ற ஒரு அமைப்பின் தோற்றத்திற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறி சமூக வலையமைப்புக்களில் பல பதிவேற்றங்களை நாள்தோறும் அவதானிக்க முடிகிறது. இவ்வமைப்பின் தோற்றத்தின் பிற்பாடே முஸ்லிம்களுக்கும் மற்றும் ஏனைய மதத்தவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றிய தேடல் அதிகரித்துச்செல்கிறது. அது ஒரு புறமிருக்க பொது பல சேனாவின் தோற்றம் முஸ்லிம்களுக்கு பெரும் சாபமாகவும் அமைந்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

7 comments:

  1. இந்த கட்டுரை எழுதியவர்க்கு ஈமான் இல்லையோ என்று என்ன தோன்ருஹிறது. படச்ச ரப்பு ரிஸ்கு த்த்ருவான் வாபா. தவகல்து அலல்லாஹ்.

    ReplyDelete
  2. நபியவர்களின் காலத்தில் கூட முஸ்லிம்களை boycott செய்தனர் இவ்வாறு ஆனால் இரண்டரை வருடங்களின் பின்னர் அல்லாஹ் அந்த சோதனயிலிருந்து ( hardships ) முஸ்லிம்களுக்கு விடுதலை கொடுத்தான். அல்லாஹ்விடம் இருந்தே இந்த கஷ்ட காலமும் வருகிறது. இது கூட ஒரு சொதனனையே .. இதை கூட அல்லாஹ் அகற்றுவான் இன்ஷா அல்லாஹ். இது ஒருசாபமும் இல்லை . பொறுமையை போதிங்கள் jafna muslim .... இந்த மாதிரியான சந்தர்பங்களில் நபியவர்களின் வலி காட்டலை பின் பற்றுங்கள் ... இதுதான் இந்த வாழ்க்கை.... ஒவ்வொரு hardships பின்னரும் ஒரு relief இருக்கும்.. ( குரான் ).

    ReplyDelete
  3. I read the article written by Ustaz Rsheed Hajul Akbar " Allah Engaludan, Naangal " we must read and understand this and it has more information for us. We should scarify to tell Islam to non Muslims

    ReplyDelete
  4. BM.SABRY SEUSL
    இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதார பங்களிப்பு குறித்து தாங்கள் தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்வதுடன் இக்கட்டுரையின் கடைசி பத்தியில் சில இலக்கண மற்றும் கருத்துப் பிழைகள் காணப்படுகின்றது. எனவே கருத்தினை மீள்பரிசீலனை செய்வது சிறப்பானது என நாம் கருதுகின்றோம்.
    BM.SABRY (BA.Hons)
    MA.MASFY (B.com)
    VM.IYSHAN (B.com)
    JM.IRFAN (BBA)

    ReplyDelete
  5. ஒரு சிலருக்காக ஒட்டு மொத்த சிங்கள சகோதர்ரகளையும் பிழை கூற வேண்டாம். தயவு செய்து இது மாதிரியான கட்டுரைகளை வெளியிடும் போது அதிக கவனம் செலுத்துங்கள்.

    ReplyDelete
  6. 64:13 اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
    64:13. அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.

    ReplyDelete
  7. உண்மை, இன்னும் கெ◌ாச்சம் பக்குவமாக செ◌ால்லியிபரருக்கலாயம்..

    ReplyDelete

Powered by Blogger.