Header Ads



ஆமை சுடுவது மல்லாத்தி அதை நாங்கள் சொன்னால் பொல்லாப்பு


(BM.Shifaan)

இன்றைய அரசியல் சூழ்நிலையில் பல அடக்கு முறைகளுக்கும் முகம் கொடுக்கக்கூடிய ஓர் அற்ப சமூகமாக முஸ்லிம்களாகிய நாங்கள் மாறிக்கொண்டிருக்கின்றோம் எங்கள் உரிமைகள் அனைத்தையும் அடகுவைத்துவிட்டு பௌத்த முஸ்லிம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் தீர்மானங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நாம் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்க அனுப்பிய அதிகார வெறியர்கள் வாய்மூடி மௌனியாகவும், கண்ணிருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனாகவும் இருந்துவிட்டு இன்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை விமர்சிக்கும் இவர்கள் பொது புளுகு சேனாவின் எடுபிடிகளா?

வாக்கு வேட்டைக்கு வரும் போதுமட்டும் மக்கள் மத்தியில் மண்டியிட்டு ஈனக்குரல் விடுத்த ஈனர்கள் இன்று முஸ்லிம்களுக்கென ஒரு சிக்கல் நிலை தோன்றிய போது மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயுள்ளார்கள். இப்பேற்பட்ட அதிகாரக்கதிரை ஆசை கொண்ட சுயநலவாதிகள் இன்னும் அரசியலுக்கு வேண்டுமா? 

11.03.2013 அன்று தீர்க்கப்பட்டுவிட்ட ஹலால் பிரச்சினையின் பின்னர் நின்று கொண்டு மக்களை முட்டாள் ஆடுகள் என்று நினைத்து பிச்சார பீரங்கிகளை இன்று முதல் முடுக்க முனையும் இவர்களால் நாம் கண்ட பலன்கள் என்ன?

எங்களுடைய சமூகத்தினை காட்டிக்கொடுத்து கூட்டிக்கொடுதடது. நக்கிப்பிழைத்தும் இவர்கள் கொண்டு வருகின்ற அற்ப அபிவிருத்திகள் (கொந்தராத்தில் அவர்களே இலாபம் தேடும்) எமக்குத் தேவைதானா?

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் ஒட்டி இருக்கின்ற 18 கோழைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து சர்வதிகார அரசை வெட்டிப்போனால் என்ன? இவர்களின் பிள்ளை குட்டிகளின் எதிர்காலம் கண்டா அஞ்சுகின்றார்கள்?

அதிகார வெறிபடித்த அற்பர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்கின்றோம் அடுத்த தேர்தலிலே உங்களுக்கு எட்டும் திசையெல்லாம் ஆப்பு காத்திருக்கிள்றது இதனை மனதில் கொண்டாவது இனி இருக்கிள்ற நாளிலாவது ஒற்றுமையாய் செயற்பட துவங்குங்கள். உங்கள் நரம்பில்லாத நாக்கினால் முஸ்லிம்கள் எங்கள் உரிமையினை கேட்டால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

யாருடைய உயிராயினும் சரி போவது ஒரு முறைதான் அது இஸ்லாத்துக்காக சென்றால் உங்களுக்கு ஜன்னதுல் பிர்தௌசில் பூஞ்சோலை காத்திருக்கிறது இதை உணர்ந்து செயற்படுவோம் வாரீர்.  

    

7 comments:

  1. அடடா !பீ எம்,ஷிபான் ஏன் இப்படி எழுதி விட்டீர்கள்?ஜன்னதுல் பிர்தௌஸ்,உயிர்த்தியாகம் இப்படியெல்லாம் எழுதி எம் அரசியல் புதல்வர்களை மேலும் பீதிக்குள்ளாக்கி விட்டீர்கள்.ஏற்கெனெவே முஸ்லிம்களுக்காக மூச்சுக்கூட விடப்பயந்தவர்கள்.இனி அதையும் விட மாட்டார்கள்.எனென்றால் இவர்களுக்குத்தான் உலக ஆ...சையும் மரணம் பற்றிய பயமும்.பதவியாசையுமதிகம்.

    ReplyDelete
  2. நன்றாக சொன்னீரகள், இன்னும் உப்பு புளி போட்டு சொல்லியிருந்தாலும் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

    கதிரைகளுக்கும், கட்ச்சிக்கும் மட்டும் வாய்திரக்கும் புண்ணாக்கு உண்னும் மாடுகளை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு வைத்த ஆப்பில் மிக பெரிய ஆப்பு இப்ப காட்டும் படம் தான் ஜெம்மியதுல் உலமாவுக்கு எதிராக. எதற்க்கும் அரவே வாய் திரக்காத இந்த மாடுகள் ஏன் இப்போது ஜெம்மியத்துல் உலமாவிற்க்கு எதிராக கூச்சலிடுகிறது, ஓ...ஒருவேலை பலு சேனாவிடமும் ஏதாவது கதிரைகளுக்கு முன் பதிவு செய்யவோ தெரியாது. மக்களே! உங்களை வைத்துதான் இன்னும் அவரகள் தன் கட்ச்சிக்கு கதிரைகளை வாங்க உள்ளனர், எனவே உறக்கத்தை விட்டு எழுந்து அவர்களின் நாடியை பிடிக்க முன்வாருங்கள்.

    தான் பிறந்த நாட்டில் பல வருடங்கள் அரசியலில் இருக்க முடியுமென்றால் அதற்க்கு என்ன காரணம், அந்த அரசியல் சாசனத்தில் இடமுண்டு என்பது தானே. அப்படியென்றால், ஏன் இவர்களால் அநீதிற்க்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை. சாசனத்தை படிக்காமல் சானி அள்ள தான் இவர்கள் பார்லிமென்டுக்கு வந்தார்களா?
    அது மட்டுமல்ல சானி அள்ளுவதோடு சல்லியும் அள்ளத்தான். வேரு என்ன இவர்களின் ஆட்டம்.

    ReplyDelete
  3. இப்பிடித்தான் ரத்தம் சூடேறினா கத்திப்போட்டு, நாளைக்கு இவங்க வரக்குள்ள ஊர், ஏரியா எண்டு வோட்ட போட்டு திரும்ப ராஜமரியாதையோடு அனுப்பி வைப்போம். ச்சும்மா போங்க ஹாஜி!!

    ReplyDelete
  4. Jannathul Furdowz is only for MUSLIMs. Not for MUNAFIQs

    ReplyDelete
  5. இவன் எல்லாம் வாய் திறந்தால் இவர்களின் சீட்டு கிழீயும் என்ற பயத்தில இருக்கின்றானொல். சுயநலவாதிகள்

    ReplyDelete
  6. It is yet not too late for them.They can get together and tell MR what the real feelings of Muslim Umma in Srilanka. Awak, get up, on your mark, get set go in the name Islam, your post is nothing when it can do nothing. We ask in the name Islam ................... Take the rulers by surprise tomorrow morning. Tell in clear words

    ReplyDelete
  7. superb very nice take a copy and issue manually

    ReplyDelete

Powered by Blogger.