பேஸ்புக்குல கமென்ட் எழுதினா..!
இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள ரம்ஸ்கேட் பகுதியை சேர்ந்தவர் டெப்ரா பர்ட் (45). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் பிஷப் பதவியேற்பு விழா ஒன்று அப்பகுதியில் நடந்தது. இதில் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்துகொண்டார். இதையொட்டி பேஸ்புக்கில் கமென்ட் எழுதிய டெப்ரா, ‘‘முட்டை வீசுவதில் நான் கில்லாடி. ஒன்றுகூட மிஸ் ஆகாது. பிரதமர் கேமரூன் மீது முட்டை வீச விரும்புகிறேன்’’ என்று கூறியிருந்தார்.
தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், பேஸ்புக்கில் இருந்த செல்போன்னை வைத்து விசாரித்து, விழாவுக்கு முந்தைய நாள் டெப்ரா வீட்டு கதவை தட்டினர். கேமரூன் இருக்கும் பக்கமே தலைவைத்து படுக்க கூடாது என்று எச்சரித்து சென்றனர். ‘பேஸ்புக்குல கமென்ட் எழுதினா, உடனே முட்டை தூக்கி அவர் மேல வீசிடுவேனா. போங்க.. போங்க.. என்னை விட்டுட்டு தப்பு செய்றவங்களை பிடிக்க பாருங்க’’ என்று காச்மூச் என்று டென்ஷன் ஆகிவிட்டார் டெப்ரா.
Post a Comment