நோர்வேயின் ஒத்துழைப்புடன் பௌத்த பிக்குகளிடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி
பௌத்த மத பிக்குகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் பலம்பொருந்திய சிலர் நோர்வேயின் ஒத்துழைப்புடன் இவ்வாறு பௌத்த மதகுருமாருக்கு இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சில பௌத்த பிக்குகளுக்கு பணத்தையும் ஏனைய வரப்பிரசாதங்களையும் நோர்வேயிடமிருந்து பெற்றுக்கொடுக்க இந்த அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை விடுத்து அரசாங்கம் பௌத்த மத பிக்குகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முயற்சிக்கும் பௌத்த பிக்குகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்தாகக் குறிப்பிட்டுள்ளார்.தாக்குதல் சம்பவங்களின் போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இது உண்மையென்றால் மிகவும் மோசமான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன மத முரண்பாடுகளை தடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் அவற்றை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பௌத்த முஸ்லிம் மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார். gtn
வெளிப்படையாகச்சொல்லவேண்டியதுதானே யார் அந்த அரசியல்வாதியென்று.
ReplyDeleteகொத்தாபய ராஜபக்ஸ பொதுபலசேனவின் பயிற்சிக்கூடமொன்றையோ அல்லது காரியாலயமொன்றையோ ஏன் திறந்துவைத்தார்.