Header Ads



பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு - ஞாபகமூட்டுகிறார் அந்நாட்டு ஜனாதிபதி


கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான்-ஈரான் நாடுகள் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை மார்ச் 11-ம்தேதி ஈரான் நகரத்தில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

உலகில் யாருக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் இல்லை. பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. பாகிஸ்தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும். பாகிஸ்தான் தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். பாக்-ஈரான் எரிவாயு குழாய் திட்ட துவக்க விழா ஈரானின் சபகார் நகரத்தில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ள பிராந்திய நாடுகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். 

பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் மோத விரும்பவில்லை. பிரச்சினைகளை புரிந்து கொள்ள, பேச்சு வார்த்தை நடத்துவதே சிறந்த வழி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.