'மௌலவியின் தொப்பியை அபகரித்து கீழே போட்டு மிதிப்பு'
(மொஹொமட் ஆஸிக்)
மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார்.
பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார்.
பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கண்டி- கல்ஹன்னை பஸ் வண்டி ஒன்றில் கல்ஹின்னை பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.
பஸ் வண்டி பூஜாப்பிட்டிய நகரின் ஊடாக செல்லும் போது அங்கிருந்த ஒரு இளைஞர் (முச்சக்கர வண்டி சாரதி என கூறப்படுகிறது) பஸ் ஜன்னல் வழியாக கையை விட்டு மௌலவி அணிந்திருந்த தொப்பியை கலட்டி எடுத்துள்ளார்.
பின் அதனை கீழே போட்டு மிதித்துள்ளார். இச் செயலை அங்கிருந்த பெரும்பான்மை சகோதரர்கள் எதிர்த்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்திற்கு உகந்ததல்ல. இது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகின்றது. எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இங்கு உரையாற்றிய பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ இச் சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானதாகும். அதனை இட்டு நாங்கள் மன வருத்தம் அடைகின்றோம். இதன் பின் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
ALLAH POATHUMANAVEN YANGALAI HAI VIDAMATTAN.
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லிம் பிரதேசங்களில் தொழில் புரியும் மாற்று மத சமூக ஆட்டோ சாரதிகளுடன் முஸ்லிம்கள் நெருங்கிய உறவுகளை பேணிக்கொள்வது சிறந்தது ,ஏனெனில் அதிகமான சந்தர்ப்பங்களில் அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அடுத்தவர்கள் இவர்களை இன முறுகல் நிலைமைகளுக்கு தூண்டுகோலாக பயன்படுத்தப்படுகின்றனர் .
pls can any one say which date incident took place
ReplyDeleteபகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!
ReplyDeleteஉரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே!
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம்
பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக் காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்!
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எழியவர்கள் நலம் பெறலாம்!
முனேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே!
கடமைகளைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே!
தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான விதையை வித்திட்டு விட்டார்கள் அந்த படுபலசென எல்லா ஊர்களிலும் உள்ள சில கயவர்களினால் இனி கொஞ்சம் கொஞ்சமாக இப்படியான விரும்பத்தகாத விடயங்கள் நடக்கத்தான் போகின்றது. முஸ்லீம்கள் பொறுமை காக்கத்தான் வேண்டும் ஆனால் எத்தனை நாட்களுக்கு ???????????
ReplyDelete