வைத்திய பீடத்திற்கு அனுமதி பெற்ற மாணவிக்கு பாராட்டு
க.பொ.த. உயர்தர பரீட்சை (2011 பழைய பாடத்திட்டம்) உயிரியல் பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 51வது இடத்தையும் பெற்று கொழும்பு பல்கலைக்கழக, வைத்திய பீடத்திற்கு அனுமதி பெற்றுள்ள மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவி செல்வி. பாத்திமா சுமையா ஜலால்தீன் அவர்களை பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், கல்முனை மாநகர முன்னாள் மேயரும், முன்னாள் செனட்டருமான அல்-ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா அவர்களும் அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை காணலாம். பாத்திமா சுமையா தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், மௌலவி. கலாநிதி ஜலால்தீன், நபீஸா மரியம் அவர்களின் இளைய புதல்வியாவார்.
Post a Comment