திருகோணமலையில் பொலிஸ் நடமாடும் சேவை
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பொலிஸ் நிலையத்தினால் தேசத்துக்கு மகுடம் திட்டத்தை முன்னிட்டு மஹதிவுல்வௌ சிங்கள மஹா வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை கன்தளாய் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி நீல் ஹெட்டி ஆராய்ச்சி தலைமையில் ஆரம்பத்து வைக்கப்பட்டது.
இந்த பொலிஸ் நடமாடும் சேவை கடந்த 21 நாட்களாக நடாத்தப்பட்டு இன்று இறுதி நாளாக தெரிவு செய்யப்பட்டு 04 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கல்வி,கலாச்சாரம்,சுகாதாரம்.வீதி புனரமைப்புக்கள் போன்ற சமூக வேலைத்திட்டங்களை நடாத்தியுள்ளதாக மொறவௌ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஐசிங்ஹ மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தமிழ்,முஸ்லிம்,சிங்களம் என பாராமல் அனைவரும் ஒரே தாய் பெற்ற மக்கள் என நினைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.பள்ளி,கோயில்,விகாரை போன்ற மதஸ்தலங்களுக்கும் ஒரே வகையில் தொண்டு சேவைகளை வழங்க வேண்டும்.என கன்தளாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நடமாடும் சேவையில் பாடசாலை மாணவர்களின் நடனங்களும்,வயோதிப பெண்களின் நாடகங்களும்,சிறுவர்களின் பாட்டு,சித்திரப்போட்டிக்கான பரிசில் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு றொட்டவௌ ஐ_ம்ஆப்பள்ளி மொளலவி நஸார்தீன், தெவனிபியவர விகாராதிபதி உபரத்ன ஹிமி,மற்றும் நொச்சிக்குளம் குருக்கள் கலந்து கொண்டதும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment