இலங்கையின் உரிமையாளர்களான பௌத்தர்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் உடன் அறிவிக்க
இலங்கையின் உரிமையாளர்களான சிங்கள பௌத்தர்கள், சிங்கள பௌத்தர்கள் என்ற காரணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எவரும் தலையிடுவதில்லை என்பதால், பௌத்தர் தம் குறைகேள் அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
சிங்கள பௌத்தர்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த பௌத்த குறைகேள் அதிகாரிகள் (ஒம்புட்மேன்ஸ்) குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவின் உறுப்பினர்களே இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிங்கள பௌத்தர்கள் என்ற காரணத்தினால் தமக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு பொதுபல சேனா சிங்கள பௌத்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நுற்றுக்கு எண்பது வீதம் பௌத்தர்களும், உங்கள் போல மொட்டையர்களும் இந்த நாட்டிலை. உங்களுக்கு என்று சிங்கள அரசாங்கம். உங்களுக்கு யார் பிரச்சனை தரப்போறர்கள். இரவில் பறக்கும் கொசுக்களும், நுளம்புகளும்தான் தற்போது உங்களுக்கு பிரச்சனை.
ReplyDelete